பக்கம்:செம்மாதுளை .pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

ஒரு நாள் பட்டமங்கலத்திலிருந்து அவனுக்கு ஆள் வந்தது. பண்ணைக்காரப் பெருச்சாளிதான் வந்தான். தனக்கு உடல்நில்ை சரியில்லையென்றும் இரண்டு நாட்க ளுக்குப் பாகனேரியில் தங்கியிருந்துவிட்டு வரப்போவ தாகவும், அதற்கு முத்தனிடம் அனுமதி கேட்டு வரும்படி கல்யாணி பெருச்சாளியிடம் சொல்லியனுப்பியிருந்தாள்,

"தேவிக்கு ஊர் நோக்கம்வந்து விட்டதாக்கும்! பெருச் சாளி! காலையிலே நான் வருவதாகச் சொல்!" என்று சொல்லியனுப்பினுன் வைரமுத்தன்:

முத்தனின் இந்தப் பதில் கல்யாணியை எல்லையற்ற இன்பத்திலாழ்த்தியது. அத்தானுக்கு அன்பு வந்து விட்டது; அதனுல்தான் நான் பாகனேரிக்குப் போவதை அவர் விரும்பவில்லை' என்று எண்ணி எண்ணிப் பூரித் தாள் கல்யாணி. நல்ல ஆடவன் தனக்கு வாய்த்திருக்கும் மனையாளை நேர்மையான எதிர்க்கட்சியாக எண்ணி அவள் கூறும் குறைகளைத் தானே திருத்திக் கொள்கிருன், நல்ல மனைவி புருஷனை மகிழ்வித்துத் தானும் மகிழ்கிருள்; அது தான் வாழ்வின் இன்பம் என்றும் முடிவுகட்டி விடுகிருள்: வைரமுத்தன் கல்யாணியை எதிர்க்கட்சியாகக் கருதவில்லை: எடுபிடி வேலைக்காக எங்கோ ஒரு தீவிலிருந்து கொண்டு வந்த இயந்திரமாகவே கருதினன். ஆளுல் கல்யாணி புருஷன் வருகிருன் என மகிழ்ந்து, சீவி முடித்து சித்திரப் பொட்டிட்டுச் சிரித்த முகம் சேகரித்துக் காத்திருந்தாள்' வந்தான் முத்தன். அத்தான்' என்ருள், இதமாகப் பேசுவான் என்று எண்ணி. பேசவா செய்தான் முத்தன். இல்லை. பெரம்பெடுத்தான். பெருங் கோபம் கொண்டு சு ழ ற் றி னு ன். பெண்ணணங்கு துடித்தாள். துவண் டாள், அத்தான் ! அத்தான் !' என்று கதறினுள். வதைத்ததோடு விட்டான முத்தன்! வாய்ச்சொல்லும் வீசி விட்டான்! - -

ஊரிலே யாரடி நேசன் ? என்றும் கேட்டு விட் !--IT&T.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/72&oldid=565986" இலிருந்து மீள்விக்கப்பட்டது