பக்கம்:செம்மாதுளை .pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

செய்தி பரவியது. பாகனேரி சாவு வீடாகியது. பெண்டிர், பிள்ளைகள், சாகக் கிடந்த குடுகுடு கிழவிகள், கண்ணுெளி இழந்த வெண்மயிர் பாட்டர்கள் அத்தனே பேரும் தலைவனை விழுங்கிய சதிக்கிடங்கு நோக்கி விரைந் தனர். ஆயுதந் தாங்கிய அடலேறுக் கோலத்தில் ஆழ் குழியில் கிடந்த அஞ்சா நெஞ்சனை வெளியில் கொண்டு வந்தார்கள். சுந்தரி வைத்த திலகம் காயவில்லை. அவள் சீவி முடித்துவிட்ட முடி அவிழவில்லை. கூட்டுக்குள் இருந்த வாள் கூட்டுக்குள் இருந்தபடி, இடுப்பில் சொருகிய கத்தி இடுப்பில் இருந்தபடி இராவணனே இரணியனே என உருவம் பெற்ற வாளுக்குவேலி பிணமாகக் காட்சி தந்தான், அவனுடைய கள்ளர் பெரும் படைக்கு!

தம்பி ஆதப்பன் அண்ணன் மீது புரண்டு புரண்டு அழுதான்; புலியடித்த கதைகளையும் அண்ணன் புகழ் சேர்த்த கதைகளையும் பாட்டாகச் சொல்லிச் சொல்லிப் புலம்பினன்.

'கணவனைத் துறந்த கட்டுக் கழுத்தி!-கனசமத்துக் காரி கல்யாணி வடித்த கண்ணிர், கத்தப்பட்டு மணலை உப் பாக்கி உலர்த்தியது.

மடிந்த மறவன் மடிந்த இடத்திலேயே சிலை வடிவு பெற்ருன். இன்றும் காணப்படும் அந்தச் சிலை, மறவனின் புகழ்பாடி நிற்கிறது. ஆண்டுக்கொருமுறை வாள் கோட்டை நாட்டார் அந்த ஆணழகன் சிலையை அலங் கரித்துப் பூரிக்கிரு.ர்கள். வீர மரணம் எய்திய வேங்கை மார்பனே ஒரு கணம் நெஞ்சுக்குக் கொண்டு வந்து ஆனந்தக் கண்ணிர் வடிக்கிருர்கள். வாளுக்குவேலி எங்கள் வாரிசு! வாழப் பிறந்தும், குலத்திற்கு இழுக்குக் கூடாது என்பதற் காக வாழாது மடிந்த புனிதவதி கல்யாணி எங்கள் வாரிசு’ என்று சொல்லிக் கொள்வதிலே பாகனேரி நாடு இன்றும் பெருமை பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/91&oldid=566005" இலிருந்து மீள்விக்கப்பட்டது