பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

105


தலைவன் :-ஒன்றுமில்லை. ஆண்மகன் ஒருவனுக்கு உயிராவது எது? தெரியுமோ?

தோழி:-ஐயனே, யானோ பெண்.எனக்கு அது தெரியாதே.

தலைவன்:-(முறுவலித்து) “வினையே ஆடவர்க்கு உயிர்."அதாவது, புகழ்தரக்கூடிய வினையைச் செய்வது தான் ஆண்மகனுக்கு உயிர். உயிரென்பது உயிரொத்த கடமை.

தோழி:-ஆமாம். இருக்கலாம். அதனை எனக்குச் சொல்வதால் பயன்?

தலைவன்:- அந்தக் கடமையைச் செய்ய யான் போக வேண்டும். சில நாட்களே பிரிந்திருக்க வேண்டும். என்ன சொல்கின்றாய்?

தோழி :- இதைத்தான் எனக்குச் சொல்ல விரும்பினீர்களா? அப்படியானால், இதனோடு வேறொன்று சொல்வார்களே? அது உங்கட்கு நினைவிருக்குமே.

தலைவன்:-(திடுக்கிட்டு) என்ன அது? எனக்கு நினைவில்லை.

தோழி:-எனக்கு நினைவிருக்கிறது: “வினையே ஆடவர்க்குயிரே, மனையுறை வாள்நுதல் மகளிர்க்கு ஆடவர் உயிரே"என்று சொல்வார்களே.

தலைவன்:-(மகிழ்ந்து) ஆமாம். மகளிர் தம் கணவனை உயிர் போலக் கருதி ஒழுகுவதுபோல, ஆடவர் தாம் செய்ய வேண்டிய வினையை உயிர்போல் கருதிச் செய்ய வேண்டும். இதுதானே அதன் கருத்து.

தோழி:-ஏன்? அதற்கு உள்ள பொருளை உள்ளபடியே......

தலைவன்:-(இடைமறித்து) நான் சொல்வது தவறேர்?

தோழி:-...ஆடவர்க்கு வினையே உயிர்; அவர்தம் மனைவியர்க்கு அவரே உயிர். அவர் பிரிந்தால், அவர்தம் மகளிரும் உயிர் பிரிவர். இதுதானே உண்மைப் பொருள்!

தலைவன்:-எப்படியோ போகட்டும். இன்று யான் தலைமகளோடு இனிதிருப்பதற்கு அன்று நீ செய்த