பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

செம்மொழிப் புதையல்


பனையளவினவாய பொருளும் முடியும் ஒருங்கே திணிக்கப் பெற்றுத் தினை யளவிற்றாய சொற்றொடர்க்கண் விளங்குவது பொருண்மொழியின் உயிர்நிலையென்பர்.[1]

இங்ஙனம், சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமு முடைமையால், இதனைப் பொன்னேபோற் புலவர்களும் மற்றவர்களும் போற்றி ஒழுகுகின்றனர். பெருங்காப்பியத்துட் சிறந்து விளங்குஞ் சிந்தாமணிபாடிய திருத்தக்கதேவரும் திருக்குறளாய பொருண்மொழிக்கணிருந்து சில கொண்டு தம், நூலின்கண் வைத்திழைத்து அழகு செய்து கொள்வாராயினர். அவற்றுள், [2]“தொழுதகையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் - அழுதகண்ணிரும் அனைத்து’ [3] “செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும், எஃகதனிற் கூரிய தில்’ என்பன அடங்கும்.

இவற்றுள், முதற்கண்ணதாய பொருண்மொழியை,

1.

“தொழுத தம்கையினுள்ளுந்துறு முடியகத்துஞ்சோர
அழுதகண்ணினுள்ளும் அணிகலத்தகத்தும் ஆய்ந்து பழுதுகண்ணரிந்துகொல்லும் படையுடனெடுங்கும் பற்றா(து) ஒழிகயார் கண்ணும்தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே.”

என்ற பாட்டிலும், இரண்டாவதனை.

2.

“செய்கபொருள்யாரும்செறுவாரைச்செறுகிற்கும்
எஃகுபிறிதில்லையிருந்தேயுயிருமுண்ணும் ஐயமிலையின்பமறனோடவையுமாக்கும் பொய்யில்பொருளேபொருள்மற்றல்லபிறபொருளே.”

என்றபாட்டிலும் அமைத்துக் கொண்டிருத்தலும் புலப்படும். விநாயக புராணம் பாடிய ஆசிரியரும் திருக்குறளின் பொருட்பாலே தம்புராணம் பாடுந்தொழிற்கு வாய்த்தபொருளும் கருவியுமாகக் கொண்டது, இப்பொருண்மொழி நூற்கட்கிடந்து


1. சிந். 189/. 2. சிந், 497,

  1. *"The essence of aphorism is the compression of a mass of thought and observation into a single saying.” - John Morley.
  2. + திருக்குறள் - 828.
  3. ++குறள் - 759.