பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

181


அப்பெண்ணின் தந்தை அவள் நிறையளவு பொன்னும் 81-யானைகளும் தந்து அவளைக் கொலைசெய்யாது விட்டுவிடுமாறு வணங்கி வேண்டினான். நன்னன் சிறிதும் இரக்கமின்றிக் கொன்றுவிட்டான். அவனை அன்றுமுதல் சான்றோர் "பெண்கொலைபுரிந்த நன்னன்," என்று புறம் பழித்தனர். அவன் மரபினரையும் இகழ்ந்தனர். அந்த நன்னன் வழியும் பின்பு அழிந்துபோயிற்று. இது முதல் "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்ற பழமொழி நிலை பெற்று வருவதாயிற்று.

“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்,” என்பதொரு மூதுரை. இயல், இசை, நாடகம் என்ற பிரிவில் நாடகம் என்பது கூத்து. இது தமிழ்க்கூத்து ஆரியக்கூத்து என இரு வகைப்படும். “ஆரியம் தமிழெனும் சீர்நடம் இரண்டினும்," என்று அறிஞர் கூறுவர். ஆரியக்கூத்தாடுவோர் ஆரியநாட்டிலிருந்து வந்து கழைக்கூத்தர்போல் கயிற்றின்மேல்நின்று பக்கத்தே பறை கொட்ட அழகாக ஆடுவர் எனக் குறுந்தொகையில் பெரும்பது மனார் பாடிய பாட்டில அறிகின்றோம். அவர்கட்கு வேந்தரும் செல்வரும் பொன்னும் பொருளும் பரிசிலாகத் தருவர். அவற்றைப் பெற்றுக்கொண்டு அவர்கள் தம் ஆரியநாட்டிற்குச் செல்வர். தமிழ்க்கூத்தர்க்கு நிலம் விடுவது வேந்தர்க்கும் செல்வர்க்கும் மரபு. பின்பு தமிழ்க்கூத்தரும் ஆரியக் கூத்தாடத் தொடங்கினர். அதற்குரிய பரிசிலாகப் பொன்னும் பொருளும் பெறுவதையே விடுத்து நிலம் பெறுவதையே தமிழ்க்கூத்தர் விரும்பினர். தமிழ்க்கூத்தர் இவ்வண்ணமே பரிசில் பெற்று வாழ்ந்த திறத்தைக் கும்பகோணத்து நாகநாத சாமிகோயில் கல்வெட்டும், திருவாவடுதுறைக் கோயில் கல்வெட்டும் கூறுகின்றன. (Annual report No. 90 of 32 and No. 120 of 1925) அதனால் தமிழ்க்கூத்தர் ஆரியக்கூத்தாடினாலும் காரியமாகிய கூத்தாட்டுக் காணிபெறும் நாட்டமே யுடையராயினர். அதுபற்றியே "ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்,” என்ற பழமொழி வழங்கிவருவதாயிற்று. -

திருஞானசம்பந்தர் சீகாழித் திருக்குளக்கரையில் நின்று சிவஞானப் பாலுண்டது முதல் “அழுதபிள்ளை பால் குடிக்கும்.” என்ற பழமொழியும், அவர் வரலாறு மட்டில் பெரியபுராணத்தில். திருஞானசம்பந்தர் புராணத்திலும் திருநாவுக்கரசு புராணத்திலும்