பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

193

வாணிகம் செய்து வந்தனர். தெலுங்கு நாட்டில் கோகழி யைஞ் துறு, திரிபுர தளம் மூன்று லக்ஷம் என நாடுகள் பெயர் பெற்று விளங்கின. அந்நாடுகளிலிருந்து வந்து வாணிகம் செய்தோர் தங்களை ஐஞ்னூற்றுவர், ஆயிரவர் எனக் கூறிக் கொள்வர். தெலுங்கு நாட்டிலிருந்து வந்து கோனாட்டில் வாணிகம் செய்தோருட் சிலர் தங்களை ஆயிரவர் என்று கூறிக் கொண்டனர். அவருள் கிராஞ்சி மலை கிளிய னின்றான் திருமலை சகஸ்ரன் என்பவன் ஒருவன். கிராஞ்சி மலை யென்பது கிரெளஞ்ச மலை யென்பதன் திரிந்த பெயர். கிழிய நின்றான் என்பது கிளிய நின்றான் எனத் திரிந்து போயிற்று. ‘கிளியனூர் எனத் தொண்டை நாட்டில் ஊர்கள் இருப்பதை நோக்க இக் கிளியன் என்பது, ஒர் இயற்பெயராக இருக்கலாமெனக் கருதுதற்கும் இடந் தருகிறது. கிராஞ்சி மலை இப்போது குண்டுர் மாவட்டத்தில் உள்ளது. குண்டுர் மாவட்டத்துக்குக் குண்டுரின் பழம் பெயர் குமட்டுர் என அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. வடுக நாட்டுக் கிராஞ்சி மலையில் தோன்றிக்கிளிய நின்றான் என்னும் வணிகன் மகனாய்க் கோனாட்டில் வந்து வாணிகம் செய்த திருமலை, சகஸ்ரம் என்னும் குடியைச் சேர்ந்தவனாவன். சகஸ்ரன், ஆயிரவன் என்னும் பொருள் தருவது.

தெலுங்க நாட்டு வணிகனான திருமலை சகஸ்ரன் கோனாட்டில் வாணிகம் செய்கையில், அருளாளன் சகஸ்ரன் என்ற வேறொருவனும் வந்து வாணிகம் செய்தான். அவனது ஊர் வேத கோமபுரம்; அதனால் அவன் வேத கோமபுரத்து அருளாளன் சகஸ்ரன் என்று வழங்கப்பட்டான். இவனது வேத கோமபுரமும் தெலுங்க நாட்டில் உள்ளதோர் ஊர். இவ் ஆரவர் பலர் சோழ நாட்டில் ஆடுதுறைப் பகுதியில் தங்கியிருந்தனர். அதனால் அப்பகுதி விக்கிரம சோழச் சதுர்வேதி மங்கலத்து வேத கோமபுரம் என்று பெய ரெய்தியிருந்தது (A.R. 366 of 1907). முதல் இராசராசனுடைய அரசியற் சுற்றத்தாருள் இராசேந்திர சிம்ம வள நாட்டுக் குறுக்கை நாட்டுக் கடலங்குடி வேத கோமபுரத்துத் தாமோதர பண்டன் என்ற ஒருவன் (Ep. Indi XXII. பக். 54). எனவே, கி.பி. பத்து, பதினோராம் நூற்றாண்டிலேயே வடுக நாட்டு வணிகர் பலர் தமிழ் நாட்டிற் புகுந்து வாணிகம் செய்தனரென்பதும், வேதியர்கள் கோயில்களிலும் அரசியலிலும் பணிபுரிந்தன ரென்பதும் தெரிகின்றன.