பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

செம்மொழிப் புதையல்


ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர். மற்றிது
நீர்த்தோ நினக்கு?’

என வெறுப்பக் கூறினார். ஒருகால், குராப்பள்ளித் துஞ்சிய சோழன் பெருந்திரு மாவளவன், மதுரைக் குமரனார் தன்பால் வறுமை யுற்றுத் தாழ்ந்து இரக்கின்றா ரெனக் கொண்டு அவரை இகழ்ந்தான். அவ்விகழ்ச்சி பொறாத குமரனார், அரச னெனக் கருதி யஞ்சுவது சிறிது மின்றி,

“மண்கெழு தானை யொண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படுஉ மோரே
சீரூர் மன்ன ராயினும் எம்வயின்
பாடறிந் தொழுகும் பண்பி னோரே’

என்று கூறித், தமது உரிமையை நிலை நாட்டினார்.

மண்ணசை குறித்தும், வலி மிகுதி குறித்தும், பண்டை வேந்தர் பிற வேந்தரொடு போர்தொடுத்தனர். அவருள், பாண்டி வேந்தரும், சேர வேந்தரும் பெரும்பாலும் போருடற்ற வேண்டியிருந்தது, இடஞ் சிறித்ென் றெழுந்த மண்ணசை குறித்தே யாகும்.

‘வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்,
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாது,
இடஞ் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா வுள்ளத்து ஓம்பா ஈகை,
கடந்தடு தானைச் சேர லாதன்’

என்பதனால், சேரனும்,

‘மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வவ்வலின்,
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்’

என்பதனால் பாண்டியனும் இடச் சிறுமை காரணமாகப் போருடற்றினமை துணியப்படும். படவே, கொடியும் முரசும் கொற்ற வெண்குண்டயும், பிறர் கொளப் பொறாது போருடற்றும் இயல்பு