பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

செம்மொழிப் புதையல்


குமுணன் தலையிழக்க நேர்ந்ததும் வறுமைக்கடலை ஈகையாற் கடக்கக் கருதியதனாலேயாம்.

கொங்கு நாட்டில் ஈரோட்டுக் கருகில் உள்ள ஈஞ்சூருக்குப் பண்டை நாளில் ஈர்ந்துர் என்பது பெயர். அந்த ஊர்க்குத் தலைவன் ஒருவன் கோயமான் என்னும் பெயருடன் விளங்கினான். அவன் தன்பால் வருவார்க்கு வேண்டும் பொருளை நிரம்பத் தரத்தக்க செல்வ முடையனல்லன். ஆயினும், இல்லையெனச் சொல்லி உள்ளது மறைத் தோதி மறுக்கும் சிறுமையும் அவனிடம் கிடையாது. அதனால் அவனை நாடி இரவலர் சென்ற வண்ணம் இருந்தனர்; அவனும் இயன்ற அளவு அவர்கட்கு உதவி வந்தான். அதற்குச் செல்வம் ஏது? அவன் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன். அவன் வாழ்ந்த நாட்டுக்குரிய முடிவேந்தன் சேரமான் குட்டுவன் கோதை யென்பவன். அவ்வேந்தன் பொருட்டு இக்கோயமான் படையேந்திப் போர் பல செய்து அதனால் பொருள் பெற்றான். அவ்வாறு பெற்ற பொருளே அவன் கொடைக்கு ஆக்கமாயிற்று. போர்க்குச் செல்வதும் வென்றியொடு பொருள் பெறுவதும் அவன் செயல்களாயின. அன்றியும், இரவலர் வறுமை காண அவன் பொறான். வறுமையில்லாமை நாட்டிற்கு அழகு என்றும், வறுமை தீர்த்தற்குப் பயன்படாத செல்வரது செல்வம் நிலத்துக்குப் பொறை யென்றும் கோயமான் எண்ணியிருந்தான். இவனைக் கோனாட்டு எறிச்சிலுர் மாட்லன் மதுரைக் குமரனார் ஒரு கால் சென்று கண்டார். அவனது மனப் பண்பைத் தெளிந்தார். ஈர்ந்துார் கிழானான கோயமான்,

‘நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே...
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ, முதுவாய் இரவல!
யாம் தன்இரக்குங் காலைத் தான்எம்
உண்ணா மருங்கு காட்டித்தன்னூர்க்
கருங் கைக் கொல்லனை இரக்கும்
திருந்திய நெடுவேல் வடித்திசின் எனவே.’

என்று பாடியுள்ளார். இதன் கண், ‘வறியார் வறுமை கண்டதும், கொல்லனையழைத்து, பார் இவர் வயிற்றை எடு அந்த வேலை;