பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சித்தாந்த கலாநிதி உரைவேந்தர்
ஒளவை துரைசாமி
(வாழ்க்கைக் குறிப்பு)

ங்கத் தமிழையும் சைவத் திருமுறைகளையும் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளையும் போற்றி வளர்த்து அரிய நூல்களுக்கு உரை வளங் கண்டு வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி உரைவேந்தராக நிலைத்த புகழ் கொண்டவர் பேராசிரியர் ஒளவை துரைசாமி.

தென்னார்க்காடு மாவட்டத்தில், ஒளவையார் குப்பம் என்னும் சிற்றுாரில், சுந்தரம் பிள்ளை, சந்திரமதி அம்மையார் இணையருக்கு 1902-ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் இரட்டையருள் ஒருவராகப் பிறந்தார் ஒளவை துரைசாமி. இவருடைய தந்தையார் தமிழ்ப்பற்று மிக்கவர். மயிலம் முருகன் குறித்த இசைப் பாடல்களை வாய்மொழியாகப் பாடி எழுதினார் என்பர்.

“ஒளவை துரைசாமி அவர்கள் பிறந்த 'ஒளவையார் குப்பம்'-செல்லும் வழி” என்று குறிக்கும் நினைவு நடுகல், மயிலம் தாண்டி கூட்டேரிப்பட்டுக்கு முன்னால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளுக்குத் திரு என்னும் அடைமொழி சேர்ந்தது போல், இவருக்கும் ஒளவை என்னும் ஊர்ப்பெயர் அடைமொழியாக இணைந்து ஒளவை துரைசாமி என்னும் பெயர் விளங்குவதாயிற்று.

உள்ளூரில் தொடக்கக் கல்வி கற்றுத் திண்டிவனம் அமெரிக்கன் ஆர்க்காடு பணிமன்ற உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அப்போதே இவர் ஓலைச் சுவடிகளை ஆராய்ந்தார் என்பது

4