பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

செம்மொழிப் புதையல்


கைக்கொண்ட இயக்கம் வெற்றிபெறாது. நம் கொள்கைக்கு மாறாகவுள்ள, பழைய நிலையிலே தம் வாணாளைச் செலவழித்தார்க்குப் புதிய கொள்கைகளும், உணர்ச்சிகளும், இயக்கங்களும், பிறவும் வெறுப்பைத் தருவனவாகலின், அவ்வெறுப்பை யுடையவரையும் நம் இயக்கத்திற்குக் கொணர்தல் இன்றியமையாது.

"நிற்க, தேனிட்டலும் மெழுகு செய்தலுமாய தொழில் களைச் செய்யும் நாம் அனைவரும் ஈயரசிகளாக மாறிவிடுவோமாயின், நமக்காக அத்தொழில்களைப் புரிபவையிலவாக, நம் நிலை மிக்க துன்ப நிலையாய் முடியும். இது நீங்கள் நன்கறிந்த தொன்று. இதனை நீங்களே எண்ணிப் பாருங்கள்.

"என்றாலும், எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது; அதனை அசட்டை செய்யாது கேட்டு, அமைவுடைத்தாயின் ஏற்றுங் கொள்ளுங்கள். அது யாதெனின், நாம் அனைவரும் ஈயரசிகளாதலினும், அவ்வரசுரிமையையே முற்றிலும் களைந்து விட்டு, அரசஈ முதல் வெற்றிவரையுள்ள அனைத்தீக்களும் தொழிலீக்களாகமாறி, நமக்குள் ஒருவகை யுயர்வு தாழ்வுமின்றி ஒருமித்து வாழ்தல் வேண்டும்" என்றோர் சொற்பொழிவு செய்தது.

இடையில், முன்னர் வசைபெற்றுச் சென்ற தொழிலி மறுமுறையும் எழுந்து, "நாம் அனைவரும் இன்றுவரைத் தொழிலீக்களாகவே உள்ளோம். அற்றாகவின், நமக்கு இவ்வியக்கத்தால் ஒரு வகைப்பயனும் எய்துதல் முடியாதென நினைக்கிறேன்" என்றது.

என்றலும் எழுந்தன. ஈக்கள். புகைப்படலம் போலத் திரண்டெழுந்து கம் கம் எனப் பேரொலி செய்து, தம் சினத்தை எவ்வெம்முறையில் அதற்குக் காட்டுதல் கூடுமோ அவ்வம் முறையில் காட்டின. காட்டக்கண்டஞ்சிய அது முன்போலவே தன் இருப்பிடம் அடைந்தது. அடைதலும், பகலவனும் மறைந்தனன், பறவைப்பாட்டு அடங்கின; எங்கும் இளையிருள் பரந்தது; நீலவானத்து நித்திலம் பதித்தாற்போலக் கோல மீனினம் தம் சிற்றொளி பரப்பின; பிற்பகல் முற்றும் குழப்பத்திடையுழந்த ஈக்கள் தத்தம் கூடடைந்து உறங்குவவாயின. பின்னர் அவ்விரவு