பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 103

துடிப்புமானியின் (Stethoscope) இருபுறமுள்ள நாடிக்குழல் போல அமைந்திருப்பதுதான் தமிழும் சம்ஸ்கிருதமும். ஆகவே, ஒன்றுக்கொன்று சாதகமானது என எண்ணுவதும் ஒன்றுக்கொன்று முட்டுக் கட்டையாயமையும் எனக் கருதுவதும் அறிவீனம் மட்டுமல்ல மா பாதகமுமான உணர்வுமாகும்

உலகப் பேரமைப்பான யுனெஸ்கோவால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையான மொழிகள் என இனங்காணப்பட்ட ஆறு மொழிகளுள் ஒன்றான தமிழ், செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிகளும் ஒருங்கே பொருந்தியுள்ள ஒரே மொழி என்பதை ஆய்வுபூர்வமாக அறிந்துணர்ந்தோம் தமிழ் மொழி செம்மொழி மகுடம் தரிப்பது எவ்வாறு என்ற கேள்வி நம் உள்ளத்தில் முளைவிடுவது இயல்புதான்

தமிழ் செம்மொழி ஆவதற்காக பாராளு மன்றத்தில் ஆளும் கட்சியால், தமிழ் செம்மொழி அங்கீகார மசோதா கொண்டு வரப் பட்டு, அதன்மீது வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று, இறுதியில் சபாநாயகரால் வாக்கெடுப்பு நடத்தி, அதிக வாக்குகளோடு மசோதா வெற்றி பெற்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, சட்டமாவதன் மூலம்தான் செம்மொழித் தகுதியைத் தமிழ் பெற முடியும் என்ற நடைமுறைகள் எதுவுமே தேவை யில்லை பின், எப்படித்தான் தமிழ் 'செம்மொழி தகுதியைப் பெறுவது?

இன்றுள்ள, மனிதவள மேம்பாடு மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர், தன் துறை மூலம், இன்று செம்மொழி அங்கீகாரம் பெற்றுள்ள மொழிகளான சம்ஸ்கிருதம், பாரசீக, அரபி மொழிகளின் செம்மொழிப் பட்டியலில் தமிழும் ஒரு