பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 செம்மொழி - உள்ளும் புறமும்

செம்மொழியாக சேர்க்கப்படுகிறது அல்லது இணைக்கப்படுகிறது என அரசு ஆணையொன்றைப் பிறப்பித்தாலே போதும், தமிழ் செம்மொழி எனும் அங்கீகார முத்திரை பெற்றுவிடும்

இதற்கு உறுதுணையாயமையும் வண்ணம் தமிழ் மொழி செம்மொழி தகுதி பெறுவதற்கான அனைத்து அம்சங்களையும் ஒருங்கே பெற்றுள்ளது என்பதை, மொழியியல் அடிப்படையிலும் பிறவகைகளிலும் நன்கு ஆய்வு செய்த மைசூரிலுள்ள மத்திய அரசின் இந்திய மொழிகளுக்கான நடுவ ஆணையம் செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப் பாடுகளும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மொழியாகத் தமிழ் இருப்பதால், அதற்குச் செம்மொழி எனும் தகுதியை - அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கலாம்' எனப் பரிந்துரைத்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொளள வேண்டிய செய்தியாகும் பின் தயக்கம் ஏன்?

தமிழை 'செம்மொழி'யாக மத்திய அரசு அங்கீகரித்தால் அது சம்ஸ்கிருதப் பெருமைக்கு இடையூறாகுமோ, ஹிந்துத்துவா கொள்கைக்கு முரணாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில், மறைமுகமான மழுப்பல் போக்கு மூலம் தமிழுக்குரிய உரிமையும் நீதியும் மறுக்கப் படுவது எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள இயலாததாகும்

எனவே, இனியும் எவ்விதக் காரணமுமின்றி, வெறுமனே காலங்கடத்தாமல் தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்க மத்திய அரசு முன் வருவதன் மூலம் நீதி நிலைபெற, உரிமையை உறுதி செய்ய எல்லா வகையிலும் முற்படும் என நம்புகிறோம்