பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 செம்மொழி - உள்ளும் புறமும்

முறையில் வளர்த்து வளப்படுத்த முயலவேண்டும் இக்காலச் சூழலுக்கேற்ப அறிவியல், தொழில்நுட்ப அறிவை சிறப்பாக வெளிப்படுத்தவல்ல மொழி தமிழ் என்பதை இன்றைய அறிவுலகுமுன் மெய்பித்துக் காட்ட வேண்டும் அதற்குள்ள தனி அம்சங்களையும் வெளிப்படுத்தி, அனைத்துத் தகுதிப்பாடுகளின் அடிப்படையில் அதனை செம்மொழியாக மத்திய அரசை அங்கீகரிக்கச் செய்ய வேண்டும்

எதிர்காலத்தில் தமிழ் பெற வேண்டிய சிறப்பு மிகு நிலைகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை சுமார் முப்பத்தொன்பது ஆண்டுகட்கு, முன்னதாக, 1963 ஆம் ஆண்டில் மாநிலங்கள் அவையில் பேசியபோது பேரறிஞர் அண்ணா வெளிப்படுத்தி சென்றுள்ளார்

"உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் என் தாய்மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது அந்தத் தமிழ் மொழி மற்ற எந்த மொழிக்கும் தாழாத வகையில் 'ஆட்சி மொழி எனற தகுதி தரபபடும் வரை நான் அமைதி பெறமாட்டேன்"

எனக் கூறியுள்ளது தமிழின் தகுதிபயாட்டிற்கேற்ப தமிழின் உரிமையை நிலைநாட்ட நமக்கு அளித்துள்ள அன்புக் கட்டளை ஆகும்

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தமிழுக்கு செம்மொழித் தகுதிப்பாட்டை நடுவணரசின் அரசாணை மூலம் நிலைநாட்டுவது அடுத்து, இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை சட்ட பூர்வமாக, அரசியலமைப்பில் இடம்பெறச் செய்வது ஆகும்