பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 11

செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப் பாடுகளும் ஒருங்கே அமைந்துள்ள தமிழுக்கு அத் தகுதியை விரைவில் செம்மொழி எனும் முத்திரை குத்தி அங்கீகரிக்கும் என்று நம்புகிறோம் இது ஒருவகை காலக்கட்டாயம் என்பதை தொடர் புடையவர்கள் உணர்வார்களாக

அத்தகுதிப்பாட்டை மொழியியல் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக வரலாற்றுப் போக்கில் விளக்கிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும் இங்கு மற்றொரு செய்தியையும் குறிப்பிட விரும்புகிறேன் அண்மையில் தஞ்சையிலுள்ள சங்கங்கள் இணைந்து நடத்திய செம்மொழி விளக்கக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமே இந்நூல் இதற்கான களம் அமைத்துத் தந்த பெருமை தஞ்சாவூர் ரோட்டரி சங்கத்தலைவர் திரு என் கணேசன் அவர்களையே சாரும் அறிவாற்றலும் செயல்திறனு மிக்க அவர் ஐந்து ரோட்டரி சங்கங்களை ஒன்றிணைத்து இக்கூட்டத்தை நடத்தினார்

சாதாரணமாக, சுழற்சங்கம்' என்றழைக்கப்படும் ரோட்டரிச் சங்கங்கள் பொது நலனையே உயிரோட்டமாகக் கொண்டவைகளாகும் எனினும், மொழி, கலை, இலக்கியப் பண்பாட்டுத் துறைகளின் பால் அவர்கள் அவ்வளவாகக் கவனம் செலுத்து வதில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும் அப்படியே ஆர்வம் ஏற்பட்டாலும் அது திரைப்படச் சார்புடையதாக மட்டுமே இருப்பதுதான் வழக்கம்

இந்நிலைக்கு மாறாக, தமிழ் வளர்ந்த தஞ்சை மண்ணில் முளைவிட்டு வளமாக வளர்ந்துவரும் சுழற்சங்கங்கள் தமிழ் மீது, அதுவும் அதன் எதிர்கால வளர்ச்சிமீது காட்டும் அக்கறையும் ஆர்வமும்