பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 செம்மொழி உள்ளும் புறமும்

சூழலில் இக்கோரிக்கைக்கு அப்படி என்ன தனி முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது? அரசு இக் கோரிக்கையை ஏற்பதால் தமிழுக்கு அப்படி என்ன பெரிய நன்மை விளைந்து விடப்போகிறது? இக் கோரிக்கையை இதுவரை அரசு ஏற்காமைக்குக் காரணம் என்ன? என்பன போன்ற வினாக்கள் பொது மக்களிடையே எழுவது இயல்புதான் தொடர் புடையவர்கள் இக்கேள்விகளுக்கெல்லாம் தக்கவாறு பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்

சுமார் நூற்றிருபது ஆண்டுகட்கு முன்பு தமிழுக்குச் சோதனையான ஒரு காலகட்டத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டது செம்மொழிப் பிரச்சினை, காலவோட்டத்தில் தமிழுக்கு நீதி கேட்கும் பிரச்சியாக மாறியது இன்றோ அதையும் கடந்த நிலையில் தமிழுக்கு முறைப்படி வழங்கப்பட வேண்டிய உரிமைப் பிரச்சினையாக மக்கள் மன்றததால் எழுப்பப்படுகிறது இதற்கு வலுவூட்டும் வகையில் அசைக்க முடியாத ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டுகின்றன அரசின் மெளனம் களைய வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இன்று உருவாகிக் கொண்டுள்ளது

தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீதி வாய்ப்பட்ட உரிமைக் கோரிக்கையாக நூற்றிருபது ஆண்டுகளுக்கு மேல், வேரில் பழுத்த பலாவாக இருந்து வருகிறது அன்று இக்கோரிக்கை எழத் தூண்டுகோலாக இருந்த சூழ்நிலை எத்தகையது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்

வணிகத்திற்காக வந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஆங்கிலேயர்கள், சுயநல வேட்கையோடு