பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 1;

தங்கள் செயல்பாடுகளைக் கைக்கொண்டிருந்தாலும் சுதேசிகளினுடைய நலத்திலும் ஒரளவு அக்கறை செலுத்துபவர்களாக இருந்ததைக் காணமுடிகிறது இதற்கு அடிப்படைக் காரணம் யார் என்பதைக் காட்டிலும் என்ன என்பதில் கருத்துன்றும் அவர்தம் மனப்போக்குதான் என்று கூறலாம்

கல்லூரி பாடமொழிப் பிரச்சினை

உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை, அவரவர் தாய் மொழியையும் ஒரு பாடமாகக் கற்க வழி வகுத்திருந்த ஆங்கிலேய அரசு, கல்லூரிக் கல்வியிலும் அவரவர் தாய் மொழியை ஒரு பாடமாகக் கற்க வழி செய்ய முற்பட்டார் அன்றைய இந்திய வைஸ்ராயாக இருந்த கர்ஸான் பிரபு இம்முயற்சியை அறிந்த சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் சுறுசுறுப்படையத் தொடங்கினர் வடநாடு, தென்னாடு, கிழக்கு மேற்கு என்ற பேதங்கள் ஏதும் இல்லாமல் இந்தியா வெங்கணுமிருந்த சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் ஒன்றிணைந்து கர்ஸான் பிரபு முன் புதுக்கோரிக்கை ஒன்றை வைத்தார்கள் என்ன கோரிக்கை?

இந்தியாவில் வாழும் மக்களில் மிகப் பெரும் பான்மையினர் ஹிந்து மத்தைப் பின்பற்றும், ஹிந்துக்கள் ஹிந்து சமய மொழியான சம்ஸ் கிருத்தை, தாய்மொழிக் கல்விக்குப் பதிலாக பாட மாக்குவதன் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரேவித சிந்தனையோட்டமுள்ள இந்தியர்களை உருவாக்க முடியும் இந்திய நாட்டின் ஒரே செம் மொழியான சம்ஸ்கிருதத்தைப் பாடமாகக் கற்பதன் மூலம்தான் ஒரேமாதிரியான பாரதப் பண்பாட்டை, கலையை, பழக்க வழக்கங்களை வளர்க்கவும், வளமடையச் செய்யவும் முடியும்' என்பதே