பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 செம்மொழி - உள்ளும் புறமும்

அக்கோரிக்கை இதன் மூலம் ஒத்த கருத்துடைய இந்தியக் குடி மக்களை எளிதாக உருவாக்க முடியும் என எடுத்துக் கூறி விளக்கப்பட்டது

அப்போது அதிகம் படித்தவர்களாக விளங்கியவர்கள் பிராமணர்கள் அரசின் முக்கியப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்களும அவர்களே எனவே, நாடெங்கணுமிருந்து சம்ஸ் கிருதப் பண்டிதர்களிடமிருந்து - வந்த கல்லூரிப் பாடத்திட்டத்தில் அவரவர் தாய் மொழிக கல்விக்குப் பதிலாக சம்ஸ்கிருதத்தை அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையைச் சட்டபூர்வமாக்கும் வகையில் அப்போதிருந்த மத்திய சட்டசபையில் ஒரு தீர்மானம் வடிவில் கொண்டு வரப்பட்டது இதை நிறைவேற்றி சட்டமாக்கிட அனைத்து வகைகளிலும் முயற்சி மேற் கொண்டனர்

தாய் மொழிக கல்விக்கு மாறாக ஒரு குறிப்பிட்ட மதச் சார்புடைய வேத மொழியான சம்ஸ்கிருதத்தைப பாடமாக்குவதா? என்ற கேள்வி அன்று வைஸ்ராயாக இருந்த கர்ஸான்பிரவு முன் பேருருக் கொண்டது அத்துடன் இது நாடெங்கும் ஒரு விவாதப் பொருளாகவும் அன்றையச் சூழலில் மறாத் தொடங்கியது கர்ஸான் பிரபுவைச் சுற்றியிருந்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் அனைவரும் பிசிறில்லாமல் ஒரே குரலில் சம்ஸ்கிருதக் கல்வியை வலியுறுத்தி வந்தனர்

இதற்கு எதிர்ப்புக் குரல்களும ஆங்காங்கே பரவலாக எழத் தொடங்கின. அதன் தொடர்ச்சி யாகத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் இங்கிருந்தபடியே எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கினர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்