பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 17

இருவர் ஒருவர் ஆங்கிலத்தில் நிறை புலமையும் சுய மரியாதைச் சிந்தனையுமுடைய முசி பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் சென்னைக் கிருத்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரான வீ.கோ சூரிய நாராயண சாஸ்திரி எனும் பெயருடைய பரிதிமாற் கலைஞருவருமாவர் இவர் சம்ஸ்கிருதப் புலமை படைத்த பண்டிதரும் கூட. திரு முசி பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தன்னை இன்னாரென வெளிக் காட்டிக் கொள்ள விழையாதவராக 'எம் எஸ் பேட்ஃபீல்டு' எனும் புனை பெயரில் அப்போது சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தி மெட்ராஸ் மெயில் என்ற ஆங்கில இதழில் கட்டுரைகள் எழுதி எதிர்ப்புக் குரல் எழுப்பி வந்தார்

செம்மொழிப் போர்வையில் சம்ஸ்கிருத முனைப்பு

சம்ஸ்கிருதத்தை கல்லூரிப் பாடமாக ஆக்க பண்டிதர்களும் பிராமண அதிகாரிகளும் கூறி வந்த காரணங்களுள் மிக முக்கியமான ஒன்று, இந்திய மொழிகளிலேயே செம்மொழி எனும் தனித்தகுதி பெற்ற ஒரே மொழி சம்ஸ்கிருதம் மட்டுமே என்பது தான் தான் போதிய அளவு சம்ஸ்கிருத மொழியறிவு பெற்றிருந்தபோதிலும், தாய் மொழிக் கல்விக்கு மாற்றாகச் சம்ஸ்கிருதக் கல்வி' என்ற சம்ஸ்கிருத ஆர்வலர்களின் வாதத்தை ஏற்காத பரிதிமாற் கலைஞர் எனும் வீ கோ சூரிய நாராயண சாஸ்திரியார், சம்ஸ்கிருத மொழியைவிட எல்லா வகையிலும் ஏற்றமிகு மொழியாக ஆற்றல்மிகு மொழியாக, இன்னும் சொல்லப்போனால் மற்ற எல்லா மொழி களையும் விட உயர்வான நிலையில் போற்றத்தக்க தனித்தன்மையுடன் செம்மையாய் அமைந்த மொழி