பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 செம்மொழி - உள்ளும் புறமும்

தமிழ் என்பதற்கொப்ப "உயர்தனிச் செம்மொழியாக அமைந்திருப்பது தமிழே என்பதை எண்பிக்க எல்லா வகையிலும் முயன்றார்

கல்லூரிப் பாடத்திட்டத்தில் தாய்மொழிக் கல்வியாக சேர்க்கப்பட வேண்டியது அவரவர் தாய் மொழியா? அல்லது இந்தியாவின் ஒரே செம் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சம்ஸ்கிருதமா? என்ற விவாதம் ஒரு கட்டத்தை எட்டியபோது, அதனை முடிவு செய்யும் பொறுப்பை அன்று இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தார் வைஸ்ராய் கர்ஸான் பிரபு அவர்கள் வைஸ்ராயிடமிருந்து வந்த கோரிக்கை, மொழித் தொடர்புடையதாக இருப்பதால் அதன் மீது முடிவெடுக்க தகுந்த அமைப்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே எனக் கருதிய அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர், முடிவெடுககும் முழுப் பொறுப்பையும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடமே ஒப்படைத்தார்

தமிழ்காத்த தகைமை

இதையறிந்த பரிதிமாற் கலைஞரும் எம்எஸ் பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் முடிவெடுக்கும் அதிகாரம படைத்த ஆசிரியர் சங்கச் செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்திதது, தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினர் இதற்காக இவ்விருவரும் பம்பரம் போல் சூழன்று செயலாற்றினர் இவர்கள் விரும்பியது போலவே பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் 'கல்லூரிகளில் அவரவர் தாய்மொழிக் கல்வியே பாடமாக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம்