பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 18

நிறைவேற்றி, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பியது துணைவேந்தர் அந்த முடிவையே சென்னைப் பல்கலைக்கழக முடிவாக வைஸ்ராய் கர்ஸான் பிரவுக்கு அனுப்பி வைத்தார் சென்னைப் பல்கலைக்கழகத் தீர்மானத்தை அரசின் தீர்மானமாக ஏற்றுக் கொண்ட கர்ஸான் பிரபு, இந்தியாவெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கட்கு அவரவர் தாய் மொழிக் கல்லி பெற பாடத்திட்டத்தில் வகை செய்யப்பட்டது இதன் மூலம் இந்தியக் குடிமக்கட்கு அவரவர் தாய் மொழிக்கல்வி, கல்லூரிகளில் ஒரு பாடமாக உறுதி செய்யப்பட்டது பரிதிமாற் கலைஞர், மு. சி பூரணலிங்கம் பிள்ளை முயற்சி களுக்குப் பின்புலமாகவும் மிகப்பெரும் உதவியாகவும் விளங்கிய பெருமை, நான்காம் தமிழ் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டித்துரை தேவர் அவர்கட்கும் உண்டு என்பதை நன்றியுணர்வோடு நினைவுகூரத் தமிழ் மக்கள் என்றென்றும் கடமைப் பட்டுள்ளனர்

திரும்பும் வரலாறு

நூறாண்டுகளுக்கு முன்னர் என்னென்ன காரணங்களைக் காட்டி, பாடத் திட்டங்களில் இடம் பெற சம்ஸ்கிருத மொழி துடித்ததோ, அதே காரணங்களைக் காட்டி, இன்றைய பாடத் திட்டத்தில் இடம் பெற பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை அன்று யாரெல்லாம், எப்படியெல்லாம் முயற்சி மேற்கொண்டு சம்ஸ்கிருதத்துக்கு சிம்மாசனம் அளிக்க முற்பட்டார்களோ, துணை நின்றார்களோ அதே தன்மையினர் தான் இன்றும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்