பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 செம்மொழி உள்ளும் புறமும்


இனி, இத்தகுதிப்பாடுகள் என்ன என்பதை ஆராய்வோம்:


1. Qg5main solo (Antiquity)


தமிழரின் தோற்ற வரலாற்றைக் குறிப்பிடும் போது, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி' என்பது ஆன்றோர் வாக்கு


தமிழரைப் போன்றே தமிழின் தோற்ற வரலாற்றைக் கணித்தறிய முயன்ற மொழியியல் அறிஞர்கள் அனைவருமே காலம் கணக்கிடவியலா தொன்மைமிகு மொழி தமிழ் என்றே குறிப்பிட்டுள்ள னர் மனிதகுல தோற்ற வரலாற்றோடு இயைபுடைய தாக இதனைக் கருதுவோரும் உண்டு எனவேதான் தமிழின் தொன்மையைப் போற்ற முனைந்த பாரதி, "ஆதிசிவன் பெற்றுவிட்டான்" எனப் பாடி, இறைவனால் உருவாக்கப்பட்டு, மனித குலத்துக்கு வழங்கப்பட்ட மொழியே தமிழ் எனக் கூறிப் பெருமைபட்டுக் கொண்டான் இதே உணர்வையே இஸ்லாமும் கிருஸ்தவமும் கொண்டுள்ளன என்று கூறலாம்


முதல் மனிதர் ஆதாம் பேசிய மொழி தமிழ்


ஆதி மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் பேசவும் தன் சந்ததியினர்க்கு விட்டுச் செல்லவும் இறைவனால் வழங்கப்பட்ட ஆதி மொழி தமிழ் என்பது, தமிழர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட குமரிக் கண்டத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களின் கருத்து கடல் பிளவுகள் (Rift) ஏற்படும் முன் ஒரே நிலப்பகுதியாக இணைந்திருந்த குமரிக்கண்டப் பகுதியில் தான் தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள் அவர்கள் தமிழைப்