பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 27

காட்டும் ஒளிவிளக்குகளாக அமைகின்றன. இந்த அடிப்படையில் தொல்காப்பியத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் பலவகையான இலக்கியப் படைப்புகள் உருவாகி இருக்க முடியும் இவ்வளவு நீண்ட காலப் பழமையுடைய இலக்கியங்கள் வேறு எந்த மொழியிலாவது உண்டா என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும்

உலகிலேயே முதல் தொகுப்பு நூல் தமிழில் மட்டுமே

ஒரு மொழியின் பழமையைக் கண்டறிய இலக்கியவாணர்களும் மொழியியல் வல்லுநர்களும் கைக்கொண்டுள்ள அளவுகோல், அம்மொழியில் முதல் தொகுப்பு நூல் எப்போது தொகுக்கப்பட்டது என்பதாகும்.

மேற்குலக மொழிகளில் பழமைமிக்கதாகக் கூறப்படும் மொழி கிரேக்க மொழியாகும் இம் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் தொகுப்பு நூல் 'கால்ண்டு ஆஃப் மெணிகர்' என்பதாகும் இத்தொகுப்பு நூல் தொகுக்கப்பட்ட காலம் கி.மு முதல் நூற்றாண்டாகும்

இதே போன்று மேற்குலக பழம்பெரு மொழிகளில் ஒன்றாகக் கருதப்படுவது லத்தீன் மொழியாகும் பிற்காலத்தில் இறப்பை மேற்கொண்டு இயங்கா மொழியாகிவிட்டபோதிலும் ஏசுவின் இறை வேத மொழியாகப் போற்றப்படும் மொழி லத்தீன் மொழியாகும் இம்மொழியில் முதல் தொகுப்பு வெளிவந்த ஆண்டு கிபி ஐந்தாம் நூற்றாண்டாகும்