பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 31

தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டு மொத்த பண்பாட்டு, கலை, நாகரிக வெளிப்பாடுகளாக அமைந்தனவே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட சாராரையும் சார்ந்ததாக அமைக்கப்படாதது தமிழ் இலக்கியத்திற்காணும் தனித்தன்மையாகும்

உலகின் முதல் குடிமக்கள் காப்பியம்

உலகின் மிகப் பெரும் காப்பியங்கள் அனைத்துமே அரசர்களையும் அரசிகளையும் நாயகர்-நாயகிகளாகக் கொண்டு படைக்கப்பட்ட வைகளாகும் உலகப் பழம்பெரும் மொழிகளான கிரேக்க மொழியாயினும் லத்தீன் அல்லது சீனம் மற்றும் சம்ஸ்கிருத இலக்கியமாயினும் அனைத்துப் படைப்புகளுமே அரசகுல நடவடிக்கைகளை விவரிப்பனவாகவே இருப்பதாகக் காணலாம் ஆனால், அதே கால கட்டத்தில் தமிழில் இயற்றப் பட்ட முதல் காப்பியமான சிலப்பதிகாரம் சாதாரண குடிமகனான, வணிகர்களின் வழித் தோன்றல்களான கோவலன் - கண்ணகியை கதாநாயகனாகவும் நாயகியாகவும் அமைத்து உருவாக்கப்பட்ட உன்னதப் படைப்பாகும் மற்ற மொழிப் பேரிலக்கியப் படைப்பு களெல்லாம் அரச குலக்காப்பியங்களாக இருக்க முதல் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரமும் இரண்டாம் பெருங்காப்பியமான மணிமேகலையும் சாதாரண குடிமக்கள் காப்பியங்களாக அமைந் திருப்பது தமிழ் இலக்கியத் தனித்தன்மையை நிலை நாட்டுவதாகும் அதிலும் சிலப்பதிகாரமும் மணி மேகலைக் காப்பியமும் ஒரே குடும்பத் தொடர் புடைய இலக்கியமாக அமைந்திருப்பது மற்றொரு சிறப்புத் தன்மையாகும். இங்கு இன்னொரு