பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 35

பின், வெப்பம் குறையவே மேற்பகுதி பனிப் படலங்களாகப் படிந்தது ஒரு ஊழிக் காலத்துக்குப் பின் பனி உருகி பள்ளங்கண்டவிடம் பாய, தரைப் பகுதி தலைதுாக்க, அதில் உயிர் வர்க்கங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி வாழத் தலைப்பட்டன எனக் கூறுவதன் மூலம், உலகம் தோன்றி நிலைபெற்ற வரலாறு முறைப்பட இப்பாடலில் சொற்செட்டோடும் பொருட் செறிவோடும் விளக்கப்படுகிறது

பதினாறாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அறிவியல் உண்மை, இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்பே தமிழனால் கண்டறியப்பட்டுள்ளது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அரிய அறிவியல் உண்மையாகும்

அவ்வாறே, இவ்வுலகம் ஐம்பெரும் பூதங்கள் என்று கூறப்படும் அடிப்படைத் தனிமங்களாலானது அதாவது, நிலம், வானம், காற்று, தீ, நீர் எனப்படும் ஐம்பூதங்களாலானது என்பது அறிவியல் உலகம் கண்டறிந்து கூறியுள்ள அடிப்படை அறிவியல் உண்மையாகும் இதை விஞ்ஞான பூர்வமாக உலகம் கண்டறிந்து அறுநூறு ஆண்டுகளே ஆகின்றது ஆனால், இதே அறிவியல் உண்மையை இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன்யே தமிழன் பாடல் வரிகளாகப் பதிவு செய்திருக்கின்றான் என்பதைச் சங்கப் பாடலொன்று,

"மண்டினிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும்