பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 செம்மொழி - உள்ளும் புறமும்

இதற்கு ஏற்றதொரு எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் படைத்தளித்த திருக்குறள் அறநூலைக் கூறலாம்

திருக்குறளுக்கு 'உலகப் பொதுமறை என்ற மற்றொரு பெயரும் உண்டு நாடு, மொழி, இனம், சமயம் அனைத்தும் கடந்த நிலையில் மனித குல நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு படைக்கப் பட்ட நீதிககளஞ்சியம திருக்குறள் வள்ளுவரின் பொதுமைப் பண்பை போற்றமுனைந்த தமிழ்ப் புலவர் ஒருவர்

"சமயக் கணக்கர் மதிவழி கூறாது

உலகியல் கூறி பொருளிதுவென்ற"

குறள் எனப் போற்றியிருப்பது தமிழ்ப் படைப்பான வள்ளுவத்தின் பொதுமைப் பண்பைப் போற்றுவதாய் உள்ளது

தமிழில் உருவாக்கப்பட்ட முதல் காப்பியம் என்ற பெருமைக்குரியது 'சிலப்பதிகாரம் ஐம்பெருங் காப்பியங்களுள் தலையாயதான சிலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியர் ஆண்ட மூன்று நாடுகளையும் ஒன்றிணைத்த காப்பியமாகும் மூவேந்தர் நாடுகளின் ஆளுகைக்குட்பட்ட இம்மூன்று நாடுகளில் தமிழே வழங்கிய போதிலும் ஆட்சிகளால் பிரிக்கப்பட்டு வாழ்ந்த தமிழர்களின் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக உலகு பார்க்கும் வண்ணம் தமிழ் இனத்தின் பொதுமை உணர்வை, இன, சமய நல்லிணக்கத்தை ஊக்கும் வகையில் சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த கண்ணகி, கோவலனோடு மதுரைக்குச் சென்று அங்கே கணவனை பலிகொடுத்து, சேரநாடு சென்று விண்ணுலகு சென்றதாகக கதையமைத்து