பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 செம்மொழி - உள்ளும் புறமும்

பேபல் டவர் உணர்த்தும் உண்மை

உலக மொழிகள் அனைத்துக்கும் ஏதோ ஒரு மொழி முதன் மொழியாக இருந்து, அதனின்றும் கிளைத்துப் பரவிய மொழிகளாகப் பிறமொழிகள் இருக்க வேண்டும் என்ற பலமான அனுமானம மொழியியல் ஆய்வாளர்களிடம் காலங்காலமாக இருந்து வருகிறது இக்கருத்துக்கு எல்லா வகையிலும் ஆக்கம் தரும் வகையில் விவிலியத்தில் பேபல் டவர் பற்றிய செய்தி அமைந்துள்ளது என்பது இங்குக் கவனித்தற்குரியதாகும் ஒரு மூல மொழியிலிருந்து பல மொழிகள் கிளைத்துப் படர்ந்தன என்பதை இந்நிகழ்வு உறுதிப்படுத்துகிறது

தொடக்கக காலத்தில் மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசி வந்தனர் அவர்கள் அனைவரும் ஒரே கூட்டமாக ஒருங்கிணைந்து ஒற்றுமையாக சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர்

இறைவனின் அற்புதப் படைப்புகளை கண்டு வியந்து நின்ற அம்மக்கள், அவ்விறைவனை நேரில் காணவிரும்பி, வானத்தை நோக்கி ஒரு மாபெரும் கோபுரத்தை எழுப்பலாயினர்

மக்கள் எல்லோரும் ஒரே மொழி பேசியதால் எல்லோரும் ஒத்த உணர்வும் சிந்தனையும் உடையவர்களாக மிகுந்த ஒற்றுமையுடன் உழைத்து கோபுரததை மிக உயரமாக விரைந்து எழுப்பினர் கோபுரமும் விண்ணை நோக்கி வேகமாக வளர்ந்து வந்தது இறைச் சவாலான இச்செயல் இறைவனுக்குச் சினமுண்டாக்கியது

எல்லோரும் ஒரே மொழி பேசுவதால்தானே அனைவரும் ஒன்றிணைந்து இறைவனுக்கே சவால்