பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 47

அப்பகுதிகளில் கிடைத்த எழுத்து முத்திரைகளில் காணப்பட்ட ஒலிக்குறியீடுகளை அறிவியல் அடிப் படையில் முனைப்புடன் ஆய்ந்த ஃபின்னிஷ் ஆய்வாளர்கள் அவ்வொலிக் குறியீடுகள் அனைத்தும் தமிழைச் சார்ந்தே உள்ளன என்பதைக் கண்டறிந்து கூறி உறுதிப்படுத்தியுள்ளனர் இதை யுனெஸ்கோ கூரியர் சர்வதேச மாத இதழ் மொகஞ்சோதரோ, ஹரப்பா சிறப்பிதழ் மூலம் ஆதரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது

சான்றாக, ஹரப்பா - மொகஞ்சோதரோ பகுதி மக்கள் உயர் சின்னமாக புலி இலச்சினையைப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது புலிச் சின்னம் பிற்காலத்தில் சோழப் பேரரசர்களின் அரசுச் சின்னமாகக் கையாளப்பட்டு வந்தது வெளிநாடு களிலிருந்து சோழநாட்டுத் துறைமுகங்கள் வழியாக வந்து சேரும் பொருட்களின் பொதியின் மீது புலிச் சின்ன முத்திரையிட்டு அனுப்புவது வழக்கம் அவ்வாறே, சோழநாட்டுத் துறைமுகங்களிலிருந்து ஏதேனும் பொருள் கப்பல் வழி வெளிநாட்டுக்கு அனுப்பும் போதும் 'புலிச் சின்னம் பொறித்தே அனுப்புவது வழக்கம் என்பதை 'புலி பொறித்துப் புறம் போக்கி என்ற பட்டினப்பாலைப் பாடல் வரிகள் வாயிலாக அறிந்துணரமுடிகிறது

ஆஃப்ரிக்க மொழிகளில் தமிழ்

இந்திய, ஆசிய மொழிகள் மட்டுமல்ல, ஆஃப்ரிக்க மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச்சாயல் நேரிடையாகவும் மறைமுகமாகவும் படிந்திருப்பதை அவ்வப்பகுதி மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர் ஆசிய, ஆஃப்ரிக்க மொழிகளன்னியில்