பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 செம்மொழி உள்ளும் புறமும்

மொழிக்கும் தமிழ் மொழிக்குமுள்ள உறவுகளையும் ஜப்பானிய மொழியின் தோற்ற வளர்ச்சிக்கு தமிழ் வழங்கியுள்ள பங்களிப்புகளையும் பற்றிய ஆய்வுகள் சிறப்பாக நடந்துள்ளன இன்றும் முனைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உள்ள உறவை, குறிப்பாக தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் அதிலும் குறிப்பாக தமிழுக்கும் திராவிட மொழி களுக்குமுள்ள தொடர்பை மொழியியல் அடிப் படையில் நீண்ட காலம் ஆய்வு செய்த கால்டுவெல் பெருமகனார், தன் ஆய்வுகளை திராவிட மொழிகளின் Qū1%uáðaðrib' (Comparative study of Dravidian Languages) எனும் பெயரில் அரிய மொழியியல் ஆய்வு நூலொன்றை எழுதியுள்ளார் அதில் இந்திய மொழிகளில் குறிப்பாக கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளோடு தமிழுக்குள்ள உறவு களையும் இம்மூன்று மொழிகளுக்கும் தமிழ் எவ்வாறு தாயாக அமைந்துள்ளது என்பதையும் அசைக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவிக்காட்டி உள்ளார்

உலகின் புகழ் பெற்ற மொழியியல் ஆய்வாள ராகவும் அறிவியல் அடிப்படையிலான மொழியியல் துறையின் தந்தையாகவும் போற்றப்படும் டாக்டர் எமினோ அவர்கள் உலக மொழிகளிலே எல்லா மொழிகளுக்கும் தாயாக விளங்கும் பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய தனிப்பெரும் சிறப்பாகும்' எனக் கூறியிருப்பது தமிழின் தாய்மைத் (Parental King. ship) தன்மைக்குக் கிடைத்த மிகப்பெரும் சிறப்பாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை