பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 51

6. பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு

தான் எழுதப்பட்ட காலம் எதுவோ, அக்காலத்தின் போக்கை முழுமையாக உணர்த்தும் இலக்கியமே தலைசிறந்த இலக்கியமாகத் திறனாய் வாளர்களால் அங்கீகரிக்கப்படும் அவ்வாறே, தன் காலத்தைத் திறம்பட கதைக் கருவின் மூலமோ பாத்திரங்கள் வாயிலாகவோ முழுமையாகச் சித்தரிக்கும் ஆசிரியனே தலைசிறந்த எழுத்தாளர்' எனும் தகுதிப்பாட்டினைப் பெறவியலும்

வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து உருவாக்கப்படும் இலக்கியமே வாழக் கற்றுத் தரும் ஆசானாகவும் அமைய வேண்டும்

காலக் கண்ணாடி

இந்தக் கருதுகோள்களின் அடிப்படையில் ஆராயும்போது சங்க இலக்கியம், சமுதாய வாழ்வின் திறந்த புத்தகம் என்றே கூறலாம் சங்கப் படைப்புகளில் கவைக்குதவாத கற்பனைகள் ஏதுமில்லாமலும் வாழ்க்கைப் போக்குகளை பகட்டில்லாமலும், உள்ளது உள்ளவாறே சித்தரிக்கும் காலக்கண்ணாடிகளாக விளங்குகின்றன எனலாம் சுருங்கச் சொன்னால் சங்கப் படைப்புகளில் வெளிப்படுத்தப்படும் அக, புற வாழ்வு நிகழ்வுகள் அனைத்துமே முழுக்க முழுக்க பட்டறிவின் வெளிப்பாடுகளாகவே விளங்குவதை அறிந்திடலாம் அவற்றில் ஒரு அம்பு ஏழு மரங்களை வெட்டி வீழ்த்தியது என்ற விந்தை நிகழ்வையோ 'உவகைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுள் ஒடி ஒளிந்தான் என்ற அதீதக் கற்பனைக் காட்சிகளையோ காணவே முடியாது. சங்க இலக்கியத்துள் சித்தரிக்கப்