பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 53

கணவனை பறிகொடுத்து, சேர நாடு சென்று விண்ணுலகு அடைந்தது மூவேந்தர் ஆண்ட மூன்று நாடுகளில் கதை நடந்ததாகக் கூறி மூன்று நாடுகளையும் அதில் வாழும் தமிழர்கள் அனை வரையும் ஒன்றிணைத்து ஒரே குரலில் பேச வைக்கிறார் இதன் மூலம் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் ஒட்டு மொத்தக் கலை, பண்பாட்டுச் செய்திகள் ஒருமுகப்படுத்தப் பட்டவைகளாக இளங்கோவால் சித்தரிக்கப்படு கின்றன இயல், இசை, நாடகக் காப்பியமாக அமைந்திருப்பதால் அன்றைய கலைகளின் பல்வேறு வகைகளையும் வடிவங்களையும் நம்மால் அறிந்து இன்புற முடிகிறது மக்களைப் பண்படுத்தி வந்த பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் திட்பதுட்பத் துடன் அறிந்தின்புற முடிகிறது அவற்றை எல்லாம் திறம்பட எடுத்தியம்பும் வண்ணம் பல்வேறு வகையான இலக்கிய உத்திகளைப் பாங்குறப் பயன்படுத்தி வெற்றியடைந்துள்ளார் இளங்கோ வடிகள்

சமய நல்லிணக்கம்

தமிழகத்தில் வடபுல சமயங்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கால் பதித்து, தங்கள் பிரச்சாரங் களை வலுவோடு நடத்த முற்பட்ட காலமும் கூட சமுதாய நோக்கோடு அகம்-புறம் என வாழ்ந்த தமிழ் மக்களை இகம்-பரம் என வாழத் துண்டிய காலகட்டமும் கூட இக்கால கட்டத்தில் அழுந்தக் காலூன்ற முயன்ற சமயங்கள் ஒருபுறம், சமயப் போக்குகளுக்கோ, சமயங்கள் உணர்த்த முற்பட்ட சமயப்பற்று, சமய வேற்றுமை உணர்வுகட்கு