பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செம்மொழி - உள்ளும் புறமும்

உணர்வோடு சமயவாதிகளே வாழ முனைந்தனர் எனக் கூறுவதன் மூலம், சாதாரண மக்கள் 'எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் கண்டு பேணுவதாக, நல்லிணக்க உணர்வோடு வாழ வழிகாட்டும் வகையில் அன்றையக் காலச் சூழலை ஆடியிற் காணும் காட்சியாகக் கூறுவதைக் காண முடிகிறது

மேற்கண்ட காட்சி சாதாரண மக்கள் கைக் கொண்டிருந்த மனநிலையைக் காட்டுகிறது சமயச் சார்புடைய மன்னர் நிலை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையும் இளங்கோ தன் காப்பியத்தில் சுட்டிக்காட்டத் தவறவில்லை

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி

சைவ சமயத்தவனான மன்னன் சேரன் செங்குட்டுவன் சிவனை வணங்கி, வழிபாடு செய்தபின் சிவப்பிரசாதங்களாகிய திருநீற்றை நெற்றி நிறைய பூசியவனாக நகர்வலம் வருகிறான் அவன் பவனி வரும் வழியில் திருமால் பள்ளி கொண்டிருக்கும் பதமநாப சுவாமி கோவில் இருக்கிறது அங்கிருக்கும் வைணவ குருமார்கள் திருமாலின் பிரசாதமான துளசி மாலையை கோவிலின் சார்பில் பிரசாதமாக கொடுக்கின்றனர் தான் சிவபக்தனாக இருந்த போதிலும நெற்றியில் சிவ பிரசாதமான திருநீறு பூசியிருப்பதனால் வைணவக் குருமார் தந்த திருமால் பிரசாதமான துளசி மாலையை உவப்போடும் பக்தி சிரத்தையோடும் இரு கரங்களால் பெற்று மார்பில் அணிந்து மகிழ்ந்தான் என்பதை,