பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 57

"ஆடகமாடத்து அரிதுயிலமர்ந்தோன் சேடங்கொண்டு சிலர்நின்றேத்த ஆங்கதுவாங்கி அணிமணிபுயத்துத் தாங்கினன்"

எனக் கூறுவதன் மூலம் அன்று வேற்றுச் சமய மன்னர்களும் பிற சமயங்களை மதித்தும் போற்றினர் சமய நல்லிணக்க உணர்வோடு மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என மக்களுக்குச் சமய நல்லிணக்க உணர்வுடன் வழிகாட்டும் வகையில் நடந்து கொண்டதை உள்ளது உள்ளவாரே கூறுகிறார்

இவ்வாறு மக்களிடம் பொதிந்து கிடந்த சமயப் பொறை, வேறுபாட்டுணர்வின்மை, மாற்றார் கருத்தை மதிக்கும் மனப்பான்மை போர் உயர் தகைமைகளைப் பட்டறிவோடு உணர்த்தும் பாங்கு தமிழ் இலக்கியங்கள், குறிப்பாகச் சங்க இலக்கியங் களில் காணும் தனித் தன்மைகளாகும்

7. பிறமொழித் தாக்கமிலா தனித்தன்மை

ஒரு மொழி செம்மொழியாவதற்கான தகுதிப் பாடுகளில் ஏழாவதாகக் குறிப்பிடப்படும் அம்சம் 'பிறமொழித் தாக்கமிலா தனித்தன்மை'யாகும்

சமுதாயக் கட்டமைப்பில் ஒரு மொழிபேசும் மக்கள் மற்ற மொழிபேசும் மக்களோடு கலந்து உறவாடுவது தவிர்க்கவியலா ஒன்றாகும் இதனால் மனித உறவு மட்டுமன்றி மொழி உறவுகளும் ஏற்படுவது இயற்கையே இந்த மொழி உறவு வெவ்வேறு மொழிபேசும் மக்களின் இணைப்பையும் பிணைப்பையும் பொறுத்து அமைவதாகும்

இவ்வாறு உருவாகும் மொழிக்கலப்பு சில சமயம் சில மொழிகளுக்கு ஆக்கமாகவும் மற்றும் சில