பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 授B

கிரியர்ஸன், கால்டுவெல், பாவாணர் போன்ற மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

மொழிக் கலப்பும் தமிழும்

உலகில் சில மொழிகள் பிறமொழிகளின் கலப்பின் காரணமாக வளமும் வலுவும் பெற்று புகழோடு இயங்கி வருகின்றன அதில் முதலாவதாக இடம்பெறத்தக்க மொழி ஆங்கிலமாகும் ஆங்கிலத்தில் கலக்காத பிறமொழிச் சொற்களே இல்லை எனலாம் வெங்காயத்தின் மேல்தோலை ஒன்றன்பின் ஒன்றாக நீக்கிக் கொண்டே போனால் இறுதியாக வெங்காயத்தில் ஒரு காம்புக்குச்சி மீந்துவது போல் ஆங்கிலத்திலுள்ள பிற மொழிச் சொற்களை யெல்லாம் நீக்கிக் கொண்டே சென்றால் இறுதியில் இங்கிலாந்தில், தொடக்க காலத்தில் வாழ்ந்த ஆதிவாசிகள் பேசிய பழைய பிரிட்டானிகா மொழியில் போய் முடியும்

இந்தியாவின் ஒரே செம்மொழி எனும் முத்திரை குத்தப்பட்டுள்ள சம்ஸ்கிருதம்கூட, பிராக்கிருதம், பாலி மொழிச் சொற்களோடு ஐந்தில் ஒரு பங்கு சிதைக்கப்பட்ட தமிழ்ச் சொற்களும் கலந்துள்ள மொழியேயாகும் என்பது கால்டுவெல், எமினோ போன்ற மொழியியலாளர் கருத்து 'சம்ஸ்கிருதம் ஏராளமான தமிழ்ச் சொற்களைக் கடன்வாங்கித் தன் சொல்வளத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளது' என சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் அறிஞரும் ஆய்வாளருமான தாமஸ் பரோ என்பார் கூறியுள்ளார். சம்ஸ்கிருத மொழியின் உறுதுணையால் உருவானவைகளே வட இந்திய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதச் சொற்களை இம்மொழி