பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 65

கொண்டு உருவாகி நிலை பெற்ற மணிமேகலைக் காப்பியத்தின் தனித்தன்மை, தனித்துவமிக்கதாகும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரே குடும்பத் தொடர்புடைய இரட்டைக் காப்பியங்கள் உலக மொழிகளிலேயே தமிழில் மட்டுமே உருவாக்கப் பட்டுள்ளன என்பது உலக இலக்கியப் படைப்புலக வரலாற்றில் காணும் சிறப்புமிகு செய்தியாகும்

9. so uff&#gso6T (NOBLEIDEAS AND IDEALS)

ஒரு மொழி செம்மொழி எனும் தகுதிப் பாட்டினைப் பெறவேண்டுமெனில் அவை பெற்றிருக்க வேண்டிய சிறப்பம்சங்களில் ஒன்று உயர் சிந்தனை வளத்தையுடைய மொழியாக அமைந்திருத்தல் அவசியமாகும் அவ்வுயர் சிந்தனை தனி மனிதனை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே வழிநடத்துவதாக இருத்தல் வேண்டும் இக்கோட் பாட்டின் அடிப்படையில் தமிழர் சிந்தனைகளை ஆயும்போது, அதில் இடம்பெற்றுள்ள உயர் சிந்தனைகள், கருத்துணர்வுகள் கடந்த கால மக்களின் நல்வாழ்வுக்கு மட்டுமல்ல, நிகழ்கால மக்களுக்கும் - ஏன் - எதிர்கால மக்களுக்கும் என்றென்றுமாகப் பின்பற்றியொழுகி, வாழ்வில் வழி காட்டும் ஒளி விளக்குகளாக அவ்வுயர்சிந்தனைகள் அமைந்துள்ளன அவற்றுள் முடிமணியாய்த் திகழ்வன யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கோட்பாடும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாழ்வியல் நெறியுமாகும்

உயர்சிந்தனையின் முத்தாய்ப்பான இவ்விரு வாழ்வியல் கோட்பாடுகள் சங்ககாலத் தமிழனின் உயிர் மூச்சுக் கொள்கைகளாகும் மனித குலத்தைச் சார்ந்த அத்தனைபேரும் ஆதிப்பிதா ஆதம் வழி வந்த