பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 செம்மொழி உள்ளும் புறமும்

சகோதரர்கள் என்ற உணர்வு அவர்களிடம் உயர் நோக்கத்துடன் இருந்து வந்தது இதனால், உலகிலுள்ள அனைத்து மக்களையும் தம் உறவினர் களாகப் பார்க்கும் உயர்சிந்தனை பெற்றிருந்தார்கள் உலகெங்கும் வாழும் அத்தனை மக்களையும் தன் உறவினர்களாகப் பாவித்து மகிழ்ந்த தமிழன் அவர்கள் வாழும் ஊர்களையெல்லாம் தன் ஊர் களாகவே பாவிக்கும் விரிமனம் கொண்ட உயர் சிந்தனையாளர்களாக வாழ்ந்தனர் என்பதையே இம்முழக்கம் வெளிப்படுத்துகிறது

அதுமட்டுமல்ல, வேறுபாட்டு உணர்வே இன்னதென்று அறியா நிலையில் உலக மக்கள் அனைவரையும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகவும் அவர்கள் அனைவருக்கும் ஒரே கடவுள் மட்டுமே இருப்பதாகவும் கருதி ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என முழங்கினான்; நம்மையும் என்றென்று மாக முழங்கி மகிழ இலக்கியத்திலும் அழுத்தமாக அவ்வுணர்வை - உயர்சிந்தனையைப் பதிவு செய்து பெருஞ்சொத்தாக நமககு விட்டுச்சென்றுள்ளனர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்புள்ள எந்த நாட்டிலாவது, எந்த மொழியிலாவது, எந்த இலககியததிலாவது இத்தகைய உயர்சிந்தனைகள் பதிவாகி உள்ளனவா என்பது விடைகாணவியலா வினாவாகவே உள்ளது

உலகில் செம்மொழிகள் எனப் போற்றப்படும் சம்ஸ்கிருதம் உட்பட வேறு எந்த மொழி இலக்கியத்திலாவது இந்த அளவுக்கு உயர்சிந்தனை வெளிப்பாடு வெளிப்படையாகக் கூறப்பட்டதாகத் தெரியவில்லை உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற பேதங்களே, ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார