பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் ፀ?

ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாகி, மக்களைப் பல பிரிவினராகப் பகுத்துப் பார்க்கும் மனப்போக்கே உலகெங்கும் நிலவிவந்தது சம்ஸ்கிருதப் படைப்புகள் சாதீயத்தை வற்புறுத்தும் வர்ணாஸ்ரம அடிப்படை கொண்டது என்பது வெள்ளிடைமலை ஆனால், தமிழில் உருவான படைப்புகள் மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகையே தன் ஊராகவும் உலக மக்கள் அனைவரையும் தன் உறவினர்களாகவும் கருதிப்போற்றும் உன்னத மனப்போக்கும் உயர் சிந்தனையும் இருந்துள்ளதை கண்டுணர முடிகிறது

பொருளியல் அடிப்படையிலான வேறு பாடுகளைவிட மத அடிப்படையிலான வேறு பாடுகளே அதிகம் மனித குலத்தை அன்றும் இன்றும் பாதிக்கிறது உலகிலுள்ள அனைத்து மக்களையும் ஒரே குலமாகக் காணும் தமிழ் உள்ளம் அனைத்துக் கடவுள்களையும் ஒரே இறைவனாகப் போற்றுவதன் மூலம் சமய மாசசரியங்களையெல்லாம் மாய்த்து, மனித இறையுணர்வுகளை ஒருமுகப்படுத்தி, ஒரே நேர்கோட்டில் செயல்பட வழிகாட்டும் ஒப்புயர்வற்ற உயர்சிந்தனையாயமைந்துள்ளது

இவ்விரு உயர்சிந்தனைகட்கும் என்றென்றுமான ஊற்றுக் கண்ணாக திருவள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் அமைந்துள்ளது உலகத்தின் ஒப்புயர்வற்ற நீதி நூலான இது, தமிழில், தமிழ்நாட்டில் எழுதப் பட்டிருப்பினும் இநநூலுள் எந்த இடத்திலும் தமிழ், தமிழ்நாடு, தமிழன் எனும் சொற்கள் அறவே இடம்பெறாதது அதன் உலகியல் நோக்கின் உச்சவுணர்வாகும்