பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 செம்மொழி உள்ளும் புறமும்

வருகின்றனர் இதனால் பொதுமக்கள் செம் மொழியா? செவ்வியல் மொழியா? எனக் குழப்ப மடைகின்றனர். இதில், எது சரியான சொல் என்பதை அறியவும் ஆர்வப்படுகின்றனர்

சாதாரணமாக, முனைப்புச் செயல் ஒன்று உருவாகும்போது அதில் குறுக்குச் சால் ஒட்டி, வேகத்தடையாயமைவதில் சிலருக்கு அலாதி விருப்பம் அத்தகைய குறுக்குச் சால்களில் ஒன்று 'செவவியல் மொழி என்பது. செம்மொழியா? செவ்வியல் மொழியா? என்பதில் கருத்தொற்றுமை தேவை.

அன்று முதல் இன்று வரை எல்லோரும் செம்மொழி என்றே கூறிவரும் போது இடையில் குறுக்குச் சாலாக 'செவ்வியல் மொழி என்பது எவ்வாறு வந்தது? 'கிளாசிககல்' எனும் ஆங்கிலச சொல்லை செவ்வியல் என மொழி பெயர்த்ததால் வந்த விளைவு இது என்கின்றனர் முதலாவது இம்மொழிபெயர்ப்பில் ஆங்கில வழி சிநதித்துத தமிழை அணுகும் ஆங்கில மொழி அடிமை உணர்வே வெளிப்படுகிறது 'கிளாசிககல் லிட்ரேச்சர் என்பதைத தமிழில் 'செவ்விலக கியம்' எனப் பெயர்த்தலே பொருத்தமாகவும் பொருள் பொதிந்ததாகவும் அமையும்

'செவ்வியல் மொழி என்று சொல்லும்போதே ஏதோ ஒரு புதுவகை இயல் மொழி போலும் என்று எண்ணத் தூண்டுகிறதன்றோ? "செவ்வி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இடஞ்சுட்டல்', 'காலம்’, ‘சமயம், தருணம் என தமிழ் லெக்சிகன் பொருள் கூறுகிறது இதே பொருளில் தமிழ் இலக்கியங்கள் பலவும் செவ்வி என்ற சொல்லைக் கையாண்டுள்ளன.