பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 89

மூவகையாகக் காணும் போக்கு, தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய தனித்தன்மையாகும்

சாதாரணமாக, தமிழ்மொழியில் பேசும்போது வல்லின, மெல்லின, இடையினச் சொற்களைக் கலந்து, உணர்வோட்டமாகப் பேசும்போது, இம் மூவின சொல்லோசை கலந்து வரும் பேச்சில் ஒரு இசைத் தன்மை இயல்பாக மேலோங்கி நிற்கும் கேட்பவர்களை இசைபோல் ஈர்க்கும் தன்மை தமிழ்ப் பேச்சுக்கு உண்டு என்பதை நாமெல்லாம் மிக நன்றாக உணர்ந்திருக்கிறோம் அதே போன்று, தமிழில் பேசும்போது சொல்ல வந்த கருத்தையும் உணர்வை யும் முழுமையாக வெளிப்படுத்த விழைகிறோம் அப்போது, பேச்சொலிக்கேற்ப கை, கால்களை அசைத்து, முகபாவங்களோடு சொல்ல விழையும் கருத்துக்கும் உணர்வுக்குமேற்ப, மெய்ப்பாடு தோன்ற வெளிப்படுத்துகிறோம் இவ்வாறு நாடகத்தில் நடிப்பது போன்ற நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம் இதனாலேயே தமிழ் நாடகப் போங்குடையதாகக் கருதப்படுகிறது அதனாலேயே தமிழ், நாடகத் தமிழாகவும் போற்றப்படுகிறது

இவைகளையன் னியில் தமிழ் இயற்றமிழ் வகையாகவும் கணிக்கப்படுகிறது இயற்றப்படும் இலக்கியங்கள் அனைத்துமே இயற்றமிழாக அழைக்கப் படினும், இசைத்தமிழ் சார்ந்த படைப்புகள் இசைத் தமிழ் சார்ந்த வகையினவாகவும் நாடகத்துறை சார்ந்த படைப்புகள் நாடகத்தமிழ் சார்ந்த வகையினவாகவும் கருதப்படுகின்றன இப்படி முத்துறைகளும் ஒரே இலக்கியப்படைப்பில் இணைந்த நிலையில் உருவாக்கப்பட்ட காப்பியமே தமிழில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சிலப்பதிகாரம் இதனைச்