பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 செம்மொழி உள்ளும் புறமும்

சிலப்பதிகாரப் பாயிரத்திலேயே ஆசிரியர் இளங்கோவடிகள்,

"இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலைச் செய்யுள்"

எனக் கூறியிருப்பதிலிருந்தே மூன்று தமிழும் ஒன்றிணைந்த நிலையில் உருவாக்கப்பட்ட முழுமுதற் காப்பியம் சிலப்பதிகாரம் எனவே அது 'முத்தமிழ்க் காப்பியம் எனச் சிறப்பித்து அழைககப்படுகிறது

எனவே தமிழ் செம்மொழித் தகுதிக்குரிய 'கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு - பங்களிப்பாலும் முதன்மை நிலை பெறுவதால் தமிழ் செம்மொழியாவதில் தகுதிப்பாட்டுத் தடைகள் ஏதும் இல்லை என்பது அக, புறச் சான்றுகளால் தெள்ளத் தெளிவாகிறது

11. மொழிக்கோட்பாடுகள் (LINGUISTIC PRINCIPLES)

செம்மொழிக்குரிய மிக முக்கியத் தகுதிப் பாடுகளில் ஒன்றாக அமைந்திருப்பது மொழிக் கோட்பாடுகள் பற்றிய இலக்கண வரம்புகளோடு கூடிய கொள்கை வரையறைகளாகும்

சாதாரணமாக 'மொழிநூல்' (Philology) அடிப்படையில் மொழியியல் கோட்பாடுகளை வகுக்கும் முறையே பல்வேறு மொழியியல் அறிஞர் களுக்கிடையே இருந்துவந்தது இதற்கான விதி முறைகள் உலக மொழிகளில் அவ்வம் மொழிக்கென அவரவர் அளவில் வகுத்துச் செயல்படுத்தி வந்த மொழிக் கோட்பாடுகளாகும் இந்த அளவுகோலைக் கொண்டே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை