பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 73

கல்கத்தா சென்ற பிறகு அங்கே வடஇந்திய மொழிகள் குறிப்பாக, சம்ஸ்கிருதம் முதல் நிலை பெற்றது. இதற்கு முதற்பெரும் காரணம் வடநாட்டு மொழிகள் அனைத்துக்கும் தாய் போல சம்ஸ்கிருதம் விளங்கியதுதான் அனைத்து மொழிகட்கும் சம்ஸ்கிருதம் அடிப்படை என்ற உணர்வு உருவாக்கப் பட்டிருந்ததும் ஒரு காரணமாகும்

கல்கத்தாவிலிருந்த ஏசியாட்டிக் சொசைட்டி யுடன் இந்திய மொழியாளர்களைப் போன்றே ஐரோப்பிய, மற்றும் ஆசிய மொழியாளர்களும் தொடர்பு கொண்டிருந்தனர் அவர்களுள் ஜெர்மன் நாட்டு மொழியாளர்களின் பங்கும் பணியும் நாள் தோறும் மிகுந்து கொண்டே வந்தது இதற்கு அடிப் படைக் காரணம் ஜெர்மானியர்கள் தங்களை ஆரிய இனத்தைச் சார்ந்தவர்களாக் கருதிக் கொண்டிருந்த தாகும் ஆரியர்களின் ஒரே வேத மொழி சம்ஸ்கிருதம் என்பது, ஜெர்மானியர்களை சம்ஸ்கிருதம் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் வைக்கத் துாண்டியது

எனவே, சம்ஸ்கிருத மொழி கற்க ஏராளமான ஜெர்மானியர்கள் இந்தியா வரத் தொடங்கினர் மொழி கற்றதோடு சம்ஸ்கிருத மொழியில் இருந்த படைப்புகளை ஜெர்மன் மொழியில் மொழி மாற்றம் செய்வதை பெரும் தொண்டாகவே கருதி செய்ய லாயினர் ஜெர்மானிய அறிஞரான மாக்ஸ்முல்லர், சம்ஸ்கிருத மொழியில் பெரும் புலமை பெற்று, ஆரிய மதத் தொடர்பான நூல்களை, குறிப்பாக வேத நூல்களை ஜெர்மன் மொழியில் பெயர்க்கலானார் ஆரியர்களைத் தவிர வேறுயாரும் வேதத்தைப் படிக்ககூடாது என விதி வகுத்துச் செயல்பட்ட ஆரிய வேதவாதிகள் மார்க்ஸ்முல்லர் வேத நூல்களை