பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 75

பரவ ஜெர்மானியர்கட்கு ஆரிய இன உணர்வு ஒரு பெரும் உந்துசக்தியாக இருந்ததுபோல் தமிழ் ஆர்வம் தூண்டுசக்தியாக மாற இயலாததும் ஒரு காரணமாகும் தமிழை உரிய முறையில் மேனாட்டாருக்கு, குறிப்பாக மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானியர்கட்கு, தமிழும் தமிழ் இலக்கியமும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் ஐரோப்பாவின் ஏன் உலகின் முழுக் கவனமும் தமிழின்பால் திரும்ப நேர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை

ஐரோப்பிய மொழி மூலம் உலகெங்கும்

ஜெர்மானியர்களால் ஐரோப்பாவெங்கும், பின்னர் உலகெங்கும் பரவலாக அறிமுகப்படுத்தப் பட்ட சம்ஸ்கிருத மொழியும் இலக்கியங்களும் உலகின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை

இத்தகைய சூழலில் ஆங்கில ஆட்சியினருக்கு நெருக்கமாக இருந்த சம்ஸ்கிருத மொழி ஆர்வலர்கள், சம்ஸ்கிருதத்தை செம்மொழியாக அரசை அங்கீகரிக்கச் செய்வதில் மிக எளிதாக வெற்றி பெற முடிந்தது ஆயினும், ஆங்கில ஆட்சி, ஹிந்து சமயம் சார்ந்த சம்ஸ்கிருதத்தை செம்மொழி ஆக்கியதால் இங்கு அறுநூறு ஆண்டு காலம் ஆட்சி செய்த முஸ்லிம்கள், தங்களைத் தவறாகக் கருதிவிடாமல் இருக்க, முகலாய மன்னர்களின் ஆட்சிமொழியாக இருந்த பாரசீக மொழியையும், முஸ்லிம்களின் சமய மொழியாக இருந்த அரபி மொழியையும் செம்மொழிகளாக ஏற்றதன் மூலம் சமநிலைப்படுத்த முயன்று, அதில் வெற்றியும் பெற்றனர் இம் மூன்று