பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 செம்மொழி - உள்ளும் புறமும்

மொழிகளும் இந்தியச் செம்மொழி மகுடந்தரித்த சூழலும் வரலாறும் இதுதான் இந்திய மொழிகளில் அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு இருந்தும், அதனை எடுத்துக் கூறவோ, அதற்கான முயற்சிகளில் ஈடுபடவோ யாரும் முனையாததால் தமிழ் செம்மொழி யாகும் நிலை, கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரிற் பழுத்த பலாவாகக் கிடக்க நேர்ந்தது

தீர்மான வடிவில் செம்மொழிக் கோரிக்கை

தமிழ் வரலாற்றிலேயே சம்ஸ்கிருதம் போல் தமிழும் ஒரு செம்மொழியே' என்ற உரிமைக் கோரிக்கை, 1885களில் பரிதிமாற் கலைஞரால் முதன் முதல் எழுப்பப்பட்டது என்பதைத் தொடக்கத்தி லேயே தெளிவுபடுத்தினோம் அவரது மறைவோடு அக்கோரிக்கையும் மறைந்தது

பரிதிமாற் கலைஞர் மறைந்து முப்பதாண்டு கட்குப் பின்னர் 1918ஆம் ஆண்டில் நடைபெற்ற சைவ சித்தாந்த சமாஜ மாநாட்டில் 'செம்மொழி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழைச் செம்மொழியாக சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்க வேண்டும் என்பது தான் அத் தீர்மான சாரம் அதனை அடுதது 1919 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றினர் இந்தத் தீர்மானம் சென்னைப் பல்கலைக்கழகத் தையும் அரசையும் கேட்டுக் கொள்வதாயமைந்தது இக் கோரிககையைத் தொடர்ந்து எந்தவிதச் செயற் பாடுகளும் இல்லாததால் மீண்டும் செம்மொழிக் கோரிக்கை நீண்ட துயில் கொள்ளலாயிற்று