பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.r---------------س--

செம்மொழி உள்ளும் புறமும் 7

'கதங் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி (குறள் 130)

எனத் திருக்குறளும்,

'வண்டுறைக் கமலச் செவ்வி வான்முகம்'

(கம்ப சூர்ப் 2) எனக் கம்பராமாயணமும் குறிப்பிடுகின்றன இவற்றிலெல்லாம் 'செவ்வி எனும் சொல் சந்தர்ப்பம், தருணம், சமயம் எனும் பொருளிலேயே கையாளப் பட்டுள்ளதைக் காணலாம்

இன்றும்கூட பள்ளித் தேர்வு வினாத் தாளில் 'செவ்வி கூறுக' என்ற தலைப்பின் கீழ், ஒரு வாசகத்தைக் கொடுத்து, அது யாரால், எந்தச் சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது? என்று கேள்வி கேட்பது வழக்கமாக உள்ளதை நாமெல்லாம் நன்கு அறிவோம்

இனி, செம்மொழி என்பதைப் பற்றி ஆராய்வோம் செம்' என்பது செம்மை என்பதன் குறுக்கமாகும செம்மொழி எனில் 'செம்மையாய் அமைந்த மொழி என்பது அதன் பொருளாகும் இதே கருத்தை, உணர்வை வெளிப்படுத்தும் வகையில் செம்மொழி மாதவர் (சிலம்பு 30-32), செம்மொழி (அகநானூறு 349), செந்தமிழ் நிலத்து வழக்கொடு (தொல் எச்ச 2) எனப் பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம் செந்தமிழ் என்பதற்குத் தமிழ்ப் புேரகராதி கலப்பற்ற தூய தமிழ் எனப் பொருள் விளக்கம் தந்து தெளிவுபடுத்துகிறது.

இதே பொருளிலும் உணர்விலும்தான் பரிதிமாற் கலைஞரும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் தமிழை 'கிளாசிக்கல் லாங்குவேஜ்' எனும் பொருளில் குறிக்க செம்மொழி (செம்மையாய்