பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 செம்மொழி - உள்ளும் புறமும்

செம்மொழி பற்றி அறிஞர்களிடையே விரிவாகப் பேச எனக்கு முதற்களமாக அமைந்தது சென்னை எஸ்பிளனேடுவில் அமைந்துள்ள ஒய் எம் சி ஏ பட்டிமன்றமாகும் 1975இல் டெல்லிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் சாலை இளந்திரையன் கலந்து கொண்ட கூட்டத்தில் இதைப் பற்றிப் பேசினேன் அதற்குக் காரணம், அவர் டெல்லியில் இருப்பவர் அங்கிருப்பவர்களுக்கு இச் செய்தியை எட்டச் செய்பவர் டெல்லியிலுள்ள மத்திய அரசின் கல்வித் துறைதான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை இதையெல்லாம் மனதிற் கொண்டு பேசியதற்கேற்ப சாலை இளந்திரையன் அவர்களும் என் கருத்தை ஆதரித்து டெல்லியில் நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்

1975இல் செம்மொழிப் பிரச்சினையை முழுவடிவில் தொடங்கியவன் என்பதற்காக புது தில்லியில் 2000இல் நடைபெற்ற 'செம்மொழி' மாநாட்டை தொடங்கிவைக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது இதில் பேரார்வம் கொண்டிருந்த

சாலையாரும் சாலினியாரும் அடுத்தடுத்து மறைந்தது மாபெரும் இழப்பாகும்

1975 தொடங்கி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதன் அவசிய, அவசரம் பற்றி பேசவும் எழுதவும் தொடங்கினேன் அவசரம்பற்றி ஆய்வறிஞர்களிடை யேயும் அரசு சார்புடையோரிடையேயும் செம்மொழி பற்றி விரிவாகப் பேசும் அரிய வாய்ப்பு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் எனக்குக் கிடைத்தது