பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 81

வழிகாட்டிய மதுரை மாநாடு

மாநாடு தொடங்கிய இரண்டாம் நாள் காலை பொது நிலைக் கருத்தரங்கில் நீதியரசர் மகராஜன் தலைமையில் உரையாற்ற எதிர்பாரா வாய்ப்புக் கிடைத்தது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் ஆய்வறிஞர்களும் பேராளர்களும் முதலமைச்சர் உட்பட அமைச்சர் பெருமக்களும் கலந்துகொண்ட கூட்டம் அது இந்த அரிய வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய நான், இன்றையச் சூழலில் தமிழை அறிவியல் தமிழாக வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசிய அவசரத்தை வலியுறுத்திப் பேசியதோடு, செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும் அதற்கு அங்கீகாரம் அரசு அளிக்காததால் நேர்ந்துள்ள பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசியபோது, அங்கு நிலவிய அமைதியும் அவையில் கேட்டுக் கொண்டிருப்போரின் முக பாவமும் இந்தக் கருத்தையும் உணர்வையும் உள்வாங்கிக் கொள்வதில் காட்டிய ஆர்வத்தையும் பிரதிபலிப்பாக இருந்தது பேசிமுடித்து இருக்கைக்குத் திரும்பியபோது, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் என் பேச்சைப் பாராட்டியதோடு, செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு பணித்தார் அவர் பாராட்டும் பணிப்பும் எனக்குப் பெருமகிழ்வளித்தது

கோரிக்கை மனு முடக்கப்பட்டது ஏன்?

செம்மொழி தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவதென்றால் சரியான காரண காரியங் களோடு இருக்க வேண்டுமெனக் கருதி, அது தொடர்பான ஆய்வில் மீண்டும் முழு மூச்சாக