பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 83 ,

மன்றம் சார்பில் 'செம்மொழி கருத்தரங்கத்தை நடத்தியது

கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது

என்னைப் பொறுத்தவரை நான் சிறிதும் சளைக்காமல் ஆண்டுதோறும் நினைவூட்டல் எனும் பெயரில் கோரிக்கை மனு அனுப்பிக்கொண்டே யிருந்தேன் 1989இல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அமைச்சரவை பதவி ஏற்றபின் கல்வி அமைச்சர் பேராசிரியர் க அன்பழகன் அவர்களை நேரில் கண்டு தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியபோது, என் கருத்துக்களை கோரிக்கை மனுவாக எழுதித்தரப் பணித்தார் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன் அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமுன் ஆட்சிக் கலைக்கப்பட்டுவிட்டது

ஏமாற்றமான தஞ்சை மாநாடு

அதன்பின் ஆட்சில் பொறுப்பேற்ற செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியில் 1995இல் தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பதையொட்டி, மாநாட்டைத் தொடங்கி வைக்க வருகை தரும் பிரதமர் பிவி நரசிம்மராவ் அவர்களைக் கொண்டு செம்மொழி அறிவிப்புச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பணிக்கவே, அப்போது தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளராக இருந்த திரு எஸ்பி இளங்கோவன், ஐ ஏ ஸ், அவர்கள் என்னை