பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் &

மனுவைப் பரிசீலித்து கருத்துரைக்குமாறு மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் ஆணையத்துக்கு அனுப்பினர். அவர்கள் அக்கோரிக்கை மனுவை எல்லாக் கோணத்திலும் அலசி ஆராய்ந்து, இறுதியில் செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப் பாடுகளும் தமிழுக்கு இருப்பதால் நடுவண் அரசு தமிழை செம்மொழியாக அறிவித்து செம்மொழிப் பட்டியலில் சேர்க்கலாம் எனப் பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது ஆனால் மத்திய அரசு அப்பரிந்துரையின்மீது இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை மீண்டும் கிணற்றுக்குள் போட்ட கல்லைப் போன்ற நிலையே தொடர்கிறது

தமிழக பா.ஜ.க. மூலம் மீண்டும் முயற்சி

இதற்கிடையே மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி ஏற்பட்டபோது, இங்குள்ள திரு இல கணேசன் போன்றவர்கள் தங்கள் தமிழார்வத்தை வெளிப் படுத்தும்வண்ணம் தமிழ் வளர்ச்சி பற்றியெல்லாம் அடிக்கடி பேசத் தலைப்பட்டனர். ஏதோ ஒரு நப்பாசை, இவர்கள் மூலம் ஏன் மத்திய அரசை நேரடியாக அணுகக்கூடாது? என்ற எண்ணம் ஏற்படவே, கமலாலயத்தில் திரு இல. கணேசன் அவர்களை நேரில் கண்டு தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெறவேண்டியதன் அவசிய அவசரத்தையும் அதனால் தமிழ் பெறக்கூடிய உலகளாவிய பலன்களையும் எடுத்துக் கூறி விளக்கினேன் அவற்றையெல்லாம் உள்வாங்கிய அவர் செம்மொழிக் கோரிக்கையை ஒரு மனுவாக