பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 செம்மொழி - உள்ளும் புறமும்

ஆங்கிலத்தில் தரும்படியாகவும் அதை நேரிடையாக பிரதமர் வாஜ்பேயிடம் தர விரும்புவதாகவும் கூறினார்

தமிழ் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளை எல்லாம் ஆங்கிலத்தில் விளக்கி மூன்று பக்க அளவில் கோரிக்கை மனுவாக திரு இல கணேசனிடம் அளிக்க, அவரும் புது தில்லியில் அடுத்து நடைபெற்ற கட்சிக் கூட்டததில் பிரதமரிடம் அளிக்க, அதை மேலோட்டமாகப் பார்த்த பிரதமர், அதை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் ஜோஸியிடம் அளிக்க அந்நிகழ்வு அத்தோடு முடிந்தது

சில மாதங்கள் காத்திருந்தேன் ஏதும் நடககவில்லை மீணடும் திரு இல கணேசன் அவர்களைக் கண்டு பேசினேன் முந்தைய மனு அதிக பக்கமிருந்ததால் பிரதமர் சரியாகப் படிக்காமலே திரு ஜோஸியிடம் தந்துவிட்டார் இம்முறை பிரதமர் படிக்கும் வகையில் இதனைச் சுருக்கமாக அரைப் பக்கம் அல்லது முக்கால் பக்கத்துக்கு மிகாமல் எழுதித் தருமாறு கேட்டார் அவ்வாறே முக்கால் பக்கத்திற்குள் கோரிக்கை மனு கொடுத்தனுப்பினேன் அவரும் அதனை பிரதமர் வாஜ்பாயிடம் சமர்பித்தார் மனுவை வாங்கிய பிரதமர் அதனை முழுக்க பார்வை யிட்ட பின் திரு ஜோஸியிடமே ஒப்படைத்து விட்டார் ஏனெனில் இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடியவர் திரு ஜோஸி மட்டுமே யாவார்

தலைநகர் தமிழ்ச் சங்க முயற்சி

இந்த முயற்சியும் உரிய பயனை அளிக்கா நிலையில், 2000ஆம் ஆண்டில் தலைநகர் தமிழ்ச்