பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 செம்மொழி உள்ளும் புறமும்

அமைந்த மொழி) எனும் சொல்லால் குறிப்பிட லாயினர் இன்னும் அதனுடைய தனித்தன்மைகளை முழுமையாய் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் 'உயர்ந்த மொழி', 'தனித்தன்மையுடைய மொழி, 'செம்மையாய் அமைந்த மொழி என குறிக்கும் வகையில், உயர் தனிச் செம்மொழி எனக் குறிப்பிட லாயினர் அவர்தம் வழியை பின்பற்றி செம்மொழி எனச் சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் குறிப்பிடுவதுதானே முறை அதை விடுத்து தேவை இல்லாமல் வேகத் தடையாயமையும் வகையில் செவ்வியல் மொழி எனக் கூறி வேறு பாட்டைக் கற்பிக்கும் 'குறுக்குச்சால் ஒட்டும் போக்கை இனியாவது தவிர்ப்பது நல்லது மொழிக் கோரிக்கையில் சொல் வழக்கில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலவுவது அவசியம் என்பதை தொடர்புடையவர்கள் இனியாவது உணர்வது நலம்

இனி, தமிழ் செம்மொழி ஆவதன் அவசர, அவசியத்தைப் பறறி சற்று ஆழமாகச் சிந்திப்போம் தமிழ், நமககெல்லாம் வெறும் தாய்மொழி மட்டுமல்ல; அது நம் முகமும் முகவரியுமாக அமைந்துள்ளது எனபதை நம்மவர்களில் பலரும் இன்னும் சரியாக அறியவோ உணரவோ இல்லை என்றே எண்ண வேண்டியுள்ளது

தமிழ் பேசுவதால் தமிழன், தமிழன் என்பதால் தமிழ் இனத்தைச் சேர்ந்தவன்; தமிழ் இனம் இம்மண்ணில் வாழ்வதனால் இது தமிழ்நாடு என்று அழைக்கப்படுகிறது எனவே, நம் முகமும் முகவரியுமாக அமைந்திருப்பது தமிழ் என்பதை நாம் கட்டாயம் உணர்ந்து கொள்ளவேண்டும் தமிழ் இல்லையென்ற நிலை ஏற்பட்டால் நாம் நம் முகத்தையும் முகவரியையும் இழந்த அநாதை