பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 93

உலகளாவிய அறநிறுவன உதவிகள்

ராக்ஃபெல்லர் ஃபெளண்டேஷன், ஃபோர்டு ஃபெளண்டேஷன் போன்ற உலகப் புகழ்பெற்ற அறக்கட்டளை நிறுவனங்கள் செம்மொழிகளில் உள்ள சிறப்புக் கூறுகளை பல்வேறு தலைப்புகளில் உலகளாவிய முறையில் ஆய்வுகள் நடைபெறுவதை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவிகளையும் ஆய்வாளர்களுக்கான உதவித் தொகைகளையும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் தமிழ் மொழி, கலை, இலக்கிய, பண்பாட்டு ஆய்வுகள் பரவலாக முனைப்புடன் நிகழ்தலுடன் இதன் வாயிலாக இத்துறைகளில் மறைபொருளாய் பொதிந்துள்ள சிறப்புக்கள் வெளிப்பட அது ஒட்டு மொத்தத் தமிழினப் பெருமையாக அமைய வாய்ப்பேற்படும்.

தமிழ் - ஆங்கில அகராதிகள்

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பூனா நகரில் டெக்கான் காலேஜ் ஆஃப் போஸ்ட் கிராஜுவேஷன் அண்டு ரிசர்ச் என்ற அமைப்பு சம்ஸ்கிருதம் செம்மொழி என்பதற்காக சம்ஸ்கிருதம்ஆங்கில அகராதிகளைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. மொத்தம் 60 தொகுதிகளைத் தயாரித்து வெளியிட வேண்டுமெனத் திட்டமிட்டு இது முப்பத்தைந்து தொகுதிகளை இதுவரை வெளி யிட்டள்ளது இதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டிருப்பது போல் தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற்றால் இதுபோல் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ்-ஆங்கில